ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS
7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 4, 2021, 7:23 AM IST

Updated : Aug 4, 2021, 7:45 AM IST

ஈட்டி எறிதல் - இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதிபெற்றுள்ளார்.

TOKYO OLYMPICS 12ஆவது நாள்: எந்த இடத்தில் இருக்கிறது இந்தியா?

டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் 12ஆம் நாள் போட்டியின் முடிவில், இந்தியா இரண்டு இடங்கள் பின்தங்கி 64ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 4) காலை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

'மோடி அரசு இருக்கும்வரை மேகதாதுவில் அணை கட்ட வாய்ப்பே இல்லை'

மத்தியில் நரேந்திர மோடி அரசு இருக்கும்வரை மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வாய்ப்பே இல்லை என அர்ஜுன் சம்பத் உறுதிபடத் தெரிவிக்கிறார்.

மீசை வளர்த்தால் சினிமாவில் வாய்ப்பு - திரைப்பட இயக்குநர் பொன்ராம்

மதுரை: இளைஞர்கள் மீசை வளர்த்தால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் உண்டு என 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்பட இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

ராணுவ முகாம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உதகை வந்த குடியரசுத் தலைவர்

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து ராணுவ விமானம் மூலம் சூலூர் விமானப்படை விமான நிலையத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

பரிசுத்தொகை ஆசையில் ரூ. 9 லட்சம் இழந்த விவசாயி; மூவர் கைது

குறுஞ்செய்தி மூலம் பரிசுத்தொகை ஆசை காட்டி விவசாயியிடம் ரூ. 9 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த 3 பேர் கரூர் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

ஆயிரம் ஆண்டு பழமையான சப்தமாதர்கள் சிற்ப தொகுப்பு கண்டெடுப்பு

உத்திரமேரூர் அருகே சோழர் காலத்தைச் சேர்ந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சப்தமாதர்கள் சிற்ப தொகுப்பை வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டெடுத்துள்ளனர்.

மீண்டும் வனத்தில் ராஜநடை போடும் ரிவால்டோ... மறுவாழ்வு அளித்த தமிழ்நாடு வனத்துறை!

கூடலூர் பகுதியில் மரக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட ரிவால்டோ யானையை, தமிழ்நாடு வனத்துறை நேற்று(ஆகஸ்ட் 3) வெற்றிகரமாக வனத்திற்குள் விடுவித்து மறுவாழ்வு அளித்துள்ளது .

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கு ஒத்திவைப்பு

ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, இயக்குநர் பா. இரஞ்சித் மீது பதியப்பட்ட வழக்கினை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Last Updated : Aug 4, 2021, 7:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.