தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மார்ச் 13) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் புதிதாக 65 ஆயிரத்து 124 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 690 பேருக்கும், அமெரிக்காவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும், ஒடிசாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு பேருக்கும், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கும் என 695 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 28 லட்சத்து 99 ஆயிரத்து 28 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் 8 லட்சத்து 58 ஆயிரத்து 967 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 662 பேர் சிகிச்சையில் உள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் 512 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 41 ஆயிரத்து 762 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் இரண்டு பேரும், அரசு மருத்துவமனையில் இரண்டு பேரும் என மேலும் நான்கு பேர் கரோனாவால் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 543 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 2,38,559
கோயம்புத்தூர் - 56,403
செங்கல்பட்டு - 53,515
திருவள்ளூர் - 44,594
சேலம் - 32,890
காஞ்சிபுரம் - 29,710
கடலூர் - 25,266
மதுரை - 21,348
வேலூர் - 21,125
திருவண்ணாமலை - 19,545
திருப்பூர் - 18,617
தஞ்சாவூர் - 18,345
தேனி - 17,197
கன்னியாகுமரி - 17,194
விருதுநகர் - 16,713
தூத்துக்குடி - 16,387
ராணிப்பேட்டை - 16,272
திருநெல்வேலி - 15,804
விழுப்புரம் - 15,303
திருச்சி - 15,116
ஈரோடு - 14,954
புதுக்கோட்டை - 11,702
நாமக்கல் - 11,869
திண்டுக்கல் - 11,586
திருவாரூர் - 11,457
கள்ளக்குறிச்சி - 10,916
தென்காசி - 8,583
நாகப்பட்டினம் - 8,691
நீலகிரி - 8,428
கிருஷ்ணகிரி - 8,215
திருப்பத்தூர் - 7,659
சிவகங்கை - 6,830
ராமநாதபுரம் - 6,493
தருமபுரி - 6,673
கரூர் - 5,530
அரியலூர் - 4,754
பெரம்பலூர் - 2,292
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 960
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,044
ரயில் மூலம் வந்தவர்கள் - 428