விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் பான்-இந்திய லவ் டிராமா: 'குட் டெவில்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் வெளியாகும் பான் இந்தியன் லவ் டிராமா திரைப்படம் ‘ரோமியோ' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.
இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்குகிறார். இவர் இதற்கு முன் ‘கணம்’ படத்தில் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்கிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இதுமட்டுமல்லாது, விளம்பரப் பட இயக்குநரான இவர், 'காதல் டிஸ்டன்சிங்' என்ற யூடியூப் தொடர் மற்றும் 'ஐ ஹேட் யூ ஐ லவ் யூ' வின் எபிசோட் 3 ஐ இயக்கியுள்ளார். இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது மற்றும் தயாரிப்பைத் தவிர, விஜய் ஆண்டனி படத்தொகுப்பையும் கவனித்து வருகிறார். இவர் ஏற்கனவே 'அண்ணாதுரை', 'திமிரு புடிச்சவன்', 'கோடியில் ஒருவன்', 'பிச்சைக்காரன் 2' ஆகிய படங்களில் தனது எடிட்டிங் திறமையை நிரூபித்துள்ளார்.
‘ஜென்டில்மேன் 2’ படம் அறிவிக்கப்பட்டதும் அதில் பங்குபெறும் முதல் தொழில்நுட்ப கலைஞராக அறிவிக்கப்பட்டது இசையமைப்பாளர் பற்றித்தான். இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க உள்ளார் என்றும் அவர் யார் என சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களில் மூன்று பேருக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்படும் என்கிற போட்டியும் அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து ஆயிரக்கணக்கானோர் இந்த போட்டியில் கலந்துகொண்டு தங்கள் யூகங்களை வெளிப்படுத்தினார்கள்.
அதில் நூற்றுக்கணக்கானோர் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் பெயரை குறிப்பிட்டிருந்தார்கள். அப்படி சரியாக பதில் சொன்ன நபர்களில் முதல் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஈரோடு, பெங்களூர், ஹைதராபாத் என மூன்று மாநிலங்களில் உள்ள ரசிகர்கள் ஜாவித், மவுலி, சரத் ஆகியோர் முதல் மூன்று இடத்தை பிடித்து தங்க நாணய பரிசை வென்றுள்ளார்கள். வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இதன் துவக்கவிழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மண்டபத்தில் பிரம்மாண்டாமாக நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்வின்போது இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் கைகளால் இவர்கள் மூவருக்கும் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.
இதையும் படிங்க: நான் நினைத்ததை விட 10 மடங்கு நன்றாக வந்துள்ளது... ஜெயிலர் பற்றி ரஜினி கூறிய கமெண்ட்!!
இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் 'லெவன்': 'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து ஏ ஆர் என்டர்டைன்மென்ட் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு 'லெவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குநர் சுந்தர் சி இடம் 'கலகலப்பு 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன்', மற்றும் 'ஆக்ஷன்' ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். 'சரபம்', 'சிவப்பு' மற்றும் 'பிரம்மன்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ள இவர், இயக்குநர் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' உள்ளிட்ட பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் 'விருமாண்டி' புகழ் அபிராமி, 'வத்திக்குச்சி' புகழ் திலீபன், 'மெட்ராஸ்' புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்தியன் 2 டீமுடன் பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர் ஷங்கர்: இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர். இவரது படங்கள் எப்போதுமே சமூக கருத்துக்களை முன்வைத்து இருக்கும். தற்போது தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை எடுத்து வருகிறார். மேலும் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தையும் எடுத்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவர் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை பெருமைப்படுத்தும் விதமாக இந்தியன் 2 படக்குழு இவருக்கு கேக் வெட்டி மகிழ்ந்துள்ளனர். படக்குழுவினர் உடன் ஷங்கர் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சந்தானத்தின் 'கிக்' டீஸர் வெளியீடு: சந்தானம் நடிக்கும் புதிய படம் 'கிக்'. இப்படத்தை, ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரித்துவருகிறார். இப்படம் மூலம் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரெஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர்.
இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக 'தாராள பிரபு' படத்தில் நடித்த தான்யா ஹோப் நடித்துள்ளார். தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீஸர் தற்போது Body:வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் சந்தானம் நடித்து வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மிகப் Conclusion:பெரிய வெற்றியை பெற்றது. இந்த படமும் அதே போல் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: குழந்தை பிறந்த பின் முதல் முறையாக தன் துணைவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை இலியானா