தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2900 கள உதவியாளர் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் பொருட்டு அறிவிக்கை எண் 5, கடந்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியிடப்பட்டு மார்ச் 24ஆம் தேதி முதல் இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு விண்ணப்பம் பெறப்படும் தேதியானது மறு தேதி அறிவிக்காமல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, அரசால் அறிவிக்கப்பட்ட தடைகளில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால், கள உதவியாளர் (பயிற்சி) பணி நியமனத்திற்கான விண்ணப்பங்கள் இணைய வழி மூலமாக பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 16ஆம் தேதிவரை பெறப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல், அறிவிப்பு எண் 3, மூலம் கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்ட 500 இளநிலை உதவியாளர், கணக்குப் பதவிக்கு மே 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் கணினி வழி தேர்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும், அவரவர் மின்னஞ்சல் முகவரியையும் பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: 2,098 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியீடு