சென்னை: வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. ஆனால், கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இன்று (நவ.13) இரவு முதல் 15- ஆம் தேதி வரை, நாகை முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் (Weather Man) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து வெதர்மேன் தெரிவித்ததாவது, “தமிழகத்தில் 13-ஆம் தேதி (இன்று) இரவில் இருந்து 15-ஆம் தேதி மதியம் வரை, நாகை முதல் சென்னை வரை உள்ள கடலோர பகுதிகளில், மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையில், கடலோர மாவட்டங்களுக்கு இம்முறை கனமழைக்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்திருந்தார்.
-
13th night to 15th Nov - Will it be the 1st big spell for Nagai to Chennai coast. Heavy Rains are seen along the coastal belt 1st time this Monsoon. How deep the clouds will move inside the coast will decide whether it is going to normal rains or very heavy ones.
— Tamil Nadu Weatherman (@praddy06) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">13th night to 15th Nov - Will it be the 1st big spell for Nagai to Chennai coast. Heavy Rains are seen along the coastal belt 1st time this Monsoon. How deep the clouds will move inside the coast will decide whether it is going to normal rains or very heavy ones.
— Tamil Nadu Weatherman (@praddy06) November 12, 202313th night to 15th Nov - Will it be the 1st big spell for Nagai to Chennai coast. Heavy Rains are seen along the coastal belt 1st time this Monsoon. How deep the clouds will move inside the coast will decide whether it is going to normal rains or very heavy ones.
— Tamil Nadu Weatherman (@praddy06) November 12, 2023
மேலும், அவர் பகிர்ந்த மீமிஸ் (Memes) ஒன்றில் “கனமழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு பல காலங்கள் ஆகிவிட்டது என்றும் இம்முறை விடுமுறைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து சென்னை வெதர்மேன் ராஜ ராமசாமி கூறுகையில், “தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான நாகை முதல் சென்னை வரை கன மழைக்கு வாய்ப்புள்ளது.
-
Pa Group !!!! ur time is nearing !!! https://t.co/i95tnu6Lo8
— Tamil Nadu Weatherman (@praddy06) November 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Pa Group !!!! ur time is nearing !!! https://t.co/i95tnu6Lo8
— Tamil Nadu Weatherman (@praddy06) November 12, 2023Pa Group !!!! ur time is nearing !!! https://t.co/i95tnu6Lo8
— Tamil Nadu Weatherman (@praddy06) November 12, 2023
இதையும் படிங்க: "4 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும்" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவு இருந்து வருகிறது. சென்னை பொருத்த வரை நாளை (நவ.14) காலை முதல் கன மழையை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும்” என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: “காவல்துறையினரை மதிக்க வேண்டும்” - குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்!