ETV Bharat / state

காலாண்டு விடுமுறை; அக்.3-இல் தனியார் பள்ளிகள் மீண்டும் திறப்பு! - School Reopen

TN Private schools will open on 3rd October: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் முதல் பருவத் தேர்வு விடுமுறைக்குப் பின்னர், அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tn-private-schools-will-open-on-3rd-october-after-the-quarterly-examination-holidays
தனியார் பள்ளிகள் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின்னர், அக்டோபர் 3ஆம் தேதி திறப்பு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 7:59 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும் முதல் பருவத் தேர்வு விடுமுறைக்குப் பின்னர், அக்டோபர் 3ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கும் என தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து, தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ் முருகன், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2023-2024ஆம் கல்வியாண்டில், காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் முதல் பருவம், காலாண்டுத் தேர்வு விடுப்பு முடிந்து அக்டோபர் 3ஆம் தேதி, அனைத்து வகை தனியார் பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடிக்கு இந்திய பசுமை கட்டிடக் கவுன்சிலின் பிளாட்டினம் சான்றிதழ்!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி முடிய முதல் பருவத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்படும்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு 2 பருவத் தேர்வுகள் நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, அக்டோபர் 3ஆம் தேதி முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் அறிவித்திருந்தார்.

அதேபோல், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Bank Holidays October 2023 : அக்டோபரில் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.