சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
அமைச்சராகப் பதவியேற்றதும், உதயநிதி ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று பாட்டி தயாளும்மாளிடம் ஆசி பெறுகிறார். தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
அதைத் தொடர்ந்து தலைமைச்செயலகம் வரும் உதயநிதி ஸ்டாலின், தனக்கான அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொள்கிறார். உதயநிதி ஸ்டாலினுக்காக தலைமைச் செயலகத்தின் 2-வது தளத்தில் பிரத்யேகமாக அறை தயார் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களாக 60 ஊழியர்களுடன், உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், உள்கட்டமைப்புப் பணிகளை அமைச்சர்கள் எ.வா.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
அங்கிருந்தவர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில், 'சிறு வயது முதலே நாங்கள் நண்பர்கள். ஆனால் முதல் முறையாக நண்பன் உதயா நாளை (டிசம்பர் 14ஆம் தேதி) அமைச்சராகிறார். நண்பர் உதயா நாளை (டிசம்பர் 14ஆம் தேதி) வருவார். பணிகளை சிறப்பாக செய்யுங்கள்' என்று கூறினார்.
இதையும் படிங்க: 10 சதவீதம் வாரிசு அரசியல் சகஜம் தான் - அமைச்சர் பொன்முடி பளீச்!