ETV Bharat / state

"1 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2ஆம் வாரத்திலிருந்து விடுமுறை அளித்திடுக" - அன்புமணி!

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், 1 முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 2ஆம் வாரத்திலிருந்து கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Govt
விடுமுறை
author img

By

Published : Mar 30, 2023, 7:05 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை சதம் அடித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால், பணிக்குச்செல்பவர்கள், பள்ளிக்குழந்தைகள், பொதுமக்கள் என அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விரைவாக தேர்வு நடத்தி, ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், "தமிழ்நாட்டில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்ட நிலையிலும், ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெயிலில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் குழந்தைகள் வாடுகின்றனர்.

ஏப்ரல் 15ஆம் நாளுக்குப் பிறகுதான் அவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். ஏப்ரல் கடைசி வாரத்தில்தான் அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்குமானால், இதை விட கொடுமையான மனித உரிமை மீறல் இருக்க முடியாது.

11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் அடுத்த சில நாட்களில் நிறைவடைகின்றன. பத்தாம் வகுப்புக்கு வரும் 6ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. உயர் வகுப்புகளுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு தொடங்கிய நிலையில் தொடக்கநிலை வகுப்புகளுக்குத் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன்?

ஏப்ரல் இறுதி வரை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக தேர்வுகளை நடத்தி, ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து கோடை விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கிடுக"- சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கம் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.