சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக ஒப்புதல் அளித்தது தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இதன்படி, 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ.19.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்திய விமான நிலைய ஆணையம் பரந்தூரைத் தேர்வு செய்வதற்கான காரணங்களில் ஒன்றாக, சென்னை - சேலம் 8 வழிச்சாலை அருகில் அமையவுள்ளதை சாத்தியமான அம்சமாக அரசு குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “பக்தி இல்லை, பகல் வேஷம் போடுகின்றனர்” - நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!