ETV Bharat / state

Chennai Metro: 28 புதிய மெட்ரோ ரயில்கள் கொள்முதல் - தமிழக அரசு ஒப்புதல்..! - TN govt has approved the purchase of 28 trains

மெட்ரோ இரயில் இயக்கத்திற்காக ரூ.2820.90 கோடி செலவில் 6 பெட்டிகள் கொண்ட 28 இரயில் தொடர்களை கூடுதலாக கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 2, 2023, 7:09 PM IST

சென்னை: 2028ஆம் ஆண்டில் மெட்ரோ இரயில் இயக்கத்திற்காக ரூ.2820.90 கோடி செலவில் 6 பெட்டிகள் கொண்ட 28 இரயில் தொடர்களை கூடுதலாக கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பிற்காக சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இத்தகைய காரணத்தினால், அதிக அளவில் வாகன நெரிசல் ஏற்படுவதால் 2015ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. முதல் கட்ட பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் கட்ட பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் காலத்தை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ நிர்வாகம் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்து வருகிறது. இதனால், 2028ஆம் ஆண்டில் மெட்ரோ இரயில் இயக்கத்திற்காக ரூ.2820.90 கோடி செலவில் 6 பெட்டிகள் கொண்ட 28 இரயில் தொடர்களை கூடுதலாக கொள்முதல் செய்ய திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையிடம் அனுமதி கோரிய நிலையில், மெட்ரோ நிர்வாகம் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மொத்தம் 54.1 கி.மீ நீளத்துடன் கூடிய இரண்டு வழித்தடங்களை கொண்ட சென்னை மெட்ரோ இரயில் கட்டம் I (நீட்டிப்புடன் சேர்த்து) முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. கட்டம் I-ன் இயக்கத்திற்காக 4 பெட்டிகளுடன் கூடிய 52 இரயில் தொடர்களை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஏற்கனவே கொள்முதல் செய்திருந்தது.

முற்பகல் உச்ச சேவைகள் காலை 8.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் உச்ச சேவைகள் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலுமாக, தற்போது ஒவ்வொரு நாளும் அதிகாலை 5.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 19 மணி நேரம் இரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இந்த இயக்கத்திற்காக இருப்பில் வைக்கப்படும் இரண்டு இரயில் தொடர்களையும் சேர்த்து மொத்தம் 45 இரயில் தொடர்கள் வாராந்திர உச்ச நேர இயக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

சென்னை மெட்ரோ இரயில் கட்டம் I-ன் கட்டமைப்பு முழுவதையும் இயக்குவதற்காகவும், 2028ஆம் ஆண்டின் உத்தேச பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கூடுதலாக தேவைப்படும் இரயில் பெட்டிகளை கணக்கிட்டு ரூ.2820.90 கோடி மதிப்பீட்டில் 6 பெட்டிகள் கொண்ட 28 இரயில் தொடர்களை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் கருத்துருவிற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இக்கருத்து மத்திய அரசின் வழியாக பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து வெளிநாட்டு கடனுதவி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சுதந்திர தின எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 5 அடுக்கு பாதுகாப்பு முறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.