சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் மாணவர்களின் மாதாந்திர சில்லறைச் செலவின உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 'தமிழ்நாடு அரசின், 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவு திட்ட அறிக்கையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் பயிலும் மாணவர்களின் மாதாந்திர சில்லறைச் செலவின உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும் எனும் அறிவிப்பு இடம் பெற்றிருந்தது.
![மாணவர்களின் உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்திய தமிழ்நாடு அரசு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13681261_cm.jpg)
இவ்அறிவிப்பினை, செயல்படுத்திடும் விதமாக, ஆதிதிராவிடர் நலப் பள்ளி விடுதிகள், பழங்குடியினர் நலப் பள்ளி விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்விப் பயிலும் மாணவர்களுக்கு எண்ணெய், சோப்பு, சிகைக்காய், மற்றும் சலவைத்தூள் வாங்குவதற்காக வழங்கப்படும் பலவகை செலவினங்களுக்கான மாதாந்திர தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.50 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படுகிறது.
![தமிழ்நாடு அரசு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-tnorder-7209106_19112021182926_1911f_1637326766_706.jpg)
இதையும் படிங்க: Farm Laws: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு