சென்னை: தமிழ்நாடு அரசு அனைத்து நியாய விலைக்கடைகள் மூலமாக பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருள்கள் உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதை கண்காணிக்க குழு அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "தமிழ்நாட்டில் சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோர் ரேஷன் அட்டைகள் வைத்துள்ளனர். இவர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வாழ்வோருக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது வழங்கப்படும்.
இந்த பரிசுப் பொருள்கள் சரியாக மக்களைச் சென்றைடைகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படும்.
மேலும் கூடுதலாக கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருள்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னை ஏமாத்திட்டான் - காதலன் மீது பிக்பாஸ் ஜூலி புகார்