தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் அனைவருமே வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
கூலி வேலை செய்பவர்கள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
ஏப்ரல் மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்கமும் வழங்கப்பட்டது. அரிசி பெறக்கூடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் வழங்கப்படுகிறது.
ரேஷன் கடைகளில் நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு ரேஷன் பொருள் வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகள் காலை 7.30 மணி முதல் மதியம் 2.30 மணிவரை திறந்திருக்கும்.
மேலும் டோக்கன் பெறாத மக்கள் ரேஷன் கடைகளில் டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம். சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றி பொருள்களை வாங்கி செல்கின்றனர். கடந்த மூன்று மாதங்கள் இலவசமாக நியாயவிலை கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், சக்கரை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.