ETV Bharat / state

உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

மதுரை, தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

tn cm Notice of financial assistance to deceased firefighters in madurai

author img

By

Published : Nov 14, 2020, 12:47 PM IST

சென்னை : மதுரை மாநகர், தல்லாக்குளம், நவபத்கானா தெருவில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று (நவ.14) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், அக்கட்டடம் இடிந்து விழுந்தது. இதில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் இருவரது குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா 25 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை, நவபத்கானா தெருவில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று ( நவ.14) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், அக்கட்டடம் இடிந்து விழுந்தபோது, அங்கு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள் கே.சிவராஜன், பி.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமடைந்தேன்.

கடமை ஆற்றும்போது ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தீயணைப்பாளர்கள் கே.சிவராஜன், பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதே பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பாளர்கள் ஆர்.கல்யாணகுமார், சின்னக்கருப்பு ஆகிய இருவரும் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் செய்தி குறித்து அறிந்தவுடன் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

கடமையாற்றும்போது உயிரிழந்த தீயணைப்பாளர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரின் கடமை உணர்வையும் தியாகத்தையும் பாராட்டி அவர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் , தலா பதினைந்து லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 25 லட்சம் ரூபாயும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் .

மேலும், காயமடைந்த தீயணைப்பாளர்கள் கல்யாணகுமார், சின்னக்கருப்பு ஆகியோருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் அரசு நிதியிலிருந்து வழங்கவும், அவர்களுக்கான மருத்துவ செலவை அரசே ஏற்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.