சென்னை: சீனாவின் ஹாங்சோவ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் தற்போது வரை 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என 111 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
-
Ten, ten, ten! Perfect scores! Devi Sheetal shot six consecutive ten rings in the last two rounds at the final of Women's Ind. Compound and won her first individual gold medal of Asian Games.#Hangzhou #AsianParaGames #HangzhouAsianParaGames #4thAsianParaGames #Hangzhou2022APG… pic.twitter.com/CV40QHpAHm
— The 4th Asian Para Games Hangzhou Official (@19thAGofficial) October 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Ten, ten, ten! Perfect scores! Devi Sheetal shot six consecutive ten rings in the last two rounds at the final of Women's Ind. Compound and won her first individual gold medal of Asian Games.#Hangzhou #AsianParaGames #HangzhouAsianParaGames #4thAsianParaGames #Hangzhou2022APG… pic.twitter.com/CV40QHpAHm
— The 4th Asian Para Games Hangzhou Official (@19thAGofficial) October 27, 2023Ten, ten, ten! Perfect scores! Devi Sheetal shot six consecutive ten rings in the last two rounds at the final of Women's Ind. Compound and won her first individual gold medal of Asian Games.#Hangzhou #AsianParaGames #HangzhouAsianParaGames #4thAsianParaGames #Hangzhou2022APG… pic.twitter.com/CV40QHpAHm
— The 4th Asian Para Games Hangzhou Official (@19thAGofficial) October 27, 2023
தங்க மகன்: ஆடவர் நீளம் தாண்டுதல் டி-64 பிரிவில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்மராஜ் சோலைராஜ் 6.80 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதே பிரிவில் இலங்கை வீரர் மத்தக கமாகே 6.68 புள்ளிகளுடன் வெள்ளியும், ஜப்பான் வீரர் மதாயோஷி கோட்டோ 6.35 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.
தங்க மகள்: மகளிருக்கான பேட்மிண்டன் பிரிவில் தமிழக வீராங்கனையான துளசிமதி முருகேசன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையை எதிர்கொண்ட துளசிமதி 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். குறிப்பாக, இறுதி செட்டில் 5-2 என்ற கணக்கில் தங்கியிருந்தபோது அபாரமாக ஆடி வெற்றியைப் பதிவு செய்தார்.
சாதனைப் பெண்: வில்வித்தையில் பென்களுக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஷீதல் தேவி 144-142 என்ற புள்ளிக் கணக்கில் சிங்கப்பூரின் அலிம் நூர் சாஹிடாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஷீதல் தேவி, நடப்பு போட்டியில் வென்ற 3வது பதக்கம் இதுவாகும். முன்னதாக, அவர் காம்பவுன்ட் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப்பதக்கமும், பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தார். இதன் மூலம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 2 தங்கப்பதங்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், பதக்கங்களை குவித்துள்ள இந்திய வீரர், வீரங்கனைகளுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த வீரரான சோலைராஜ், பேட்மிண்டன் வீரங்கனையான துளசிமதி முருகேசன் மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஷீதல் தேவி ஆகிய மூவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
Three remarkable athletes, three golden stories of inspiration!
— M.K.Stalin (@mkstalin) October 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Teenager Sheetal Devi from Jammu and Kashmir secured a historic achievement, becoming the first Indian woman to win two gold medals in a single Asian Para Games edition. A hat-trick of medals for the 16-year-old, as… https://t.co/24cxG5EzFC pic.twitter.com/JVho2SvRgd
">Three remarkable athletes, three golden stories of inspiration!
— M.K.Stalin (@mkstalin) October 28, 2023
Teenager Sheetal Devi from Jammu and Kashmir secured a historic achievement, becoming the first Indian woman to win two gold medals in a single Asian Para Games edition. A hat-trick of medals for the 16-year-old, as… https://t.co/24cxG5EzFC pic.twitter.com/JVho2SvRgdThree remarkable athletes, three golden stories of inspiration!
— M.K.Stalin (@mkstalin) October 28, 2023
Teenager Sheetal Devi from Jammu and Kashmir secured a historic achievement, becoming the first Indian woman to win two gold medals in a single Asian Para Games edition. A hat-trick of medals for the 16-year-old, as… https://t.co/24cxG5EzFC pic.twitter.com/JVho2SvRgd
மு.க.ஸ்டாலின் வாழ்த்து: இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X பதிவில், “தனிச்சிறப்பான மூன்று விளையாட்டு வீரர்கள். உத்வேகம் அளிக்கும் மூன்று தங்கக் கதைகள். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
16 வயதே ஆன வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல், ஏற்கனவே பெண்களுக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவிலும், கலப்பு காம்பவுண்ட் பிரிவிலும் தங்கம் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி என மூன்று பதக்கங்களை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
நமது தமிழ்நாட்டின் பெருமை தர்மராஜ் சோலைராஜ், ஆண்கள் நீளம் தாண்டுதல் T-64 பிரிவில் 6.80 மீட்டர் தாண்டி புதிய ஆசிய சாதனையையும், பாரா விளையாட்டு சாதனையையும் படைத்துள்ளார். மகளிர் பாட்மிண்டனில் SU5 பிரிவில் தங்கம் வென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதியும் நம் பாராட்டுக்குரியவராகிறார். இந்த மூன்று வியத்தகு சாதனைகளும் நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் ஒளிவிளக்குகளாகத் திகழ்கின்றன” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆசிய பாரா விளையாட்டு போட்டி; 100 பதக்கங்களைக் கடந்து வரலாற்று சாதனை படைத்த இந்தியா!