தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் கரோனா தொற்றால் 2,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 62,087 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 1,487 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 42,659ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 34,112 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் நாளை (ஜுன் 24) காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனையில் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விவாதிக்க உள்ளார் என்று தெரிகிறது. மேலும், அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுப்பது குறித்து நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தெரியவரும்.
இதையும் படிங்க... 'உச்ச நீதிமன்ற கட்டளைகளை அரசு பின்பற்ற வேண்டும்'- மு.க. ஸ்டாலின் அறிக்கை!