ETV Bharat / state

கோடநாடு வழக்கு - முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஈபிஎஸ் இடையே பேரவையில் காரசார விவாதம்!

ஈபிஎஸ்ஸின் முன்னாள் தனி பாதுகாப்பு அதிகாரியிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ள நிலையில், கோடநாடு விவகாரத்தில் மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 20, 2023, 7:04 PM IST

assembly
கொடநாடு

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் தனி பாதுகாப்பு அதிகாரியிடம், இன்று(ஏப்.20) காலை சுமார் 4 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரிடமிருந்து முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "பொள்ளாச்சி வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? கோடநாடு சம்பவம் என்ன ஆயிற்று? தற்போது நாங்கள்தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

அதற்கு ஈபிஎஸ், "கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்தது, அதிமுக அரசுதான். அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக. கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாட உள்ளோம்" என்றார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், "கோடநாடு விவகாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் மெத்தனமாக இருந்தீர்கள். நாங்கள் அந்த வழக்கு குறித்து முறையாக விசாரணை நடத்தி குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.

அதற்கு ஈபிஎஸ், ''கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தபோது கரோனா காலகட்டம்; அதனால் முறையாக விசாரணை நடத்த முடியவில்லை'' என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ''கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் தப்ப முடியாதபடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதி அளித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "அதிமுக ஆட்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள், குத்தப்பட்டார்கள். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெட்டப்பட்டார்கள், அதை கண்டுபிடித்தார்களா?" என கேள்வி எழுப்பினார்.

அப்போது ஈபிஎஸ், ''கோடநாடு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், அது குறித்து எப்படி பேசலாம்?'' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், "நாங்கள் தீர்ப்பிற்குள், விசாரணைக்குள் செல்லவில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றுதான் பேசுகிறோம். குற்றவாளி சயான் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. சம்பவம் நடந்த உடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தியிருந்தால், வழக்கு நிலுவையில் இருந்திருக்காது. அம்மையார் ஜெயலலிதா வீட்டில் சம்பவம் நடைபெற்றது. அவர் சாதாரண நபர் கிடையாது, முதலமைச்சராக இருந்தவர். அதனால் மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி உண்மை சம்பவத்தை கண்டுபிடிப்போம்" என்று கூறினார்.

அப்போது ஈபிஎஸ், "அந்த வீடு வேறொருவருடையது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு கிடையாது. அது தனியார் இடம்தான். அரசு உங்களிடம் தான் இருக்கிறது. விசாரணை நடத்திக் கொள்ளுங்கள்" என்றார்.

அதற்கு முதலமைச்சர், "அந்த வீடு அவருடையதாக இல்லை என்றாலும், அவர் இருந்த வீடு, அலுவலகமாக பயன்படுத்திய வீடு. கோடநாடு விவகாரத்தில் கவனத்தோடு விசாரணை நடத்தி உண்மை குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு - ஈபிஎஸின் முன்னாள் தனி பாதுகாப்பு அதிகாரியிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.