சென்னையை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு கலந்துகொண்டு பொதுமக்களிடம் பேசினார்.
அப்போது அவர், ஆவடி முதல் கூடுவாஞ்சேரி வரையிலான புதிய ரயில் பாதை திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாகவும், தண்டலம் பகுதியில் விரைவில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி நினைவகம் அருகில் ஒரு மேம்பாலமும், அம்பத்தூர் அருகே ஒரு புதிய மேம்பாலமும் அமைக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முதல்கட்டமாக 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி, மரம் நடுதல் அவசியத்தை பற்றி டி.ஆர். பாலு எடுத்துரைத்தார்.
இதையும் படிங்க :துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி; வெளியான சிசிடிவி