சென்னை, தண்டையார்பேட்டை, சேனி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். பக்ரைன் நாட்டில் வசித்து வரும் இவர், சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினைப் பதிவு செய்வதற்காக சென்னை வந்துள்ளார்.
இந்நிலையில் தண்டையார்பேட்டை, தாண்டவராயன் தெருவில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளி 164ஆவது வாக்குச்சாவடியில் தனது வாக்கை இவர் செல்லுத்த செல்லும்போது, அவரது வாக்கு ஏற்கனவே தபால் வாக்கு மூலம் பதிவாகி உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலுவலர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அவரது கேள்விக்கு யாரும் முறையாக பதில் சொல்லாமல் அலைக்கழித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் நடக்கும்போது வாக்களிப்பதற்காக தவறாமல் வெளிநாட்டிலிருந்து வந்து, தான் வாக்களித்து செல்வதாகவும், இதுவரை தபால் மூலம் வாக்கு செலுத்தியதே இல்லை எனவும், இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்கார் பட பாணியில் வெளிநாட்டிலிருந்து வாக்களிப்பதற்காக வந்தவரின் வாக்கு, தபால் வாக்கு மூலம் ஏற்கனவே பதிவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ’ஒவ்வொருவரும் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும்’