சென்னை: திருமலை-திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, தமிழ்நாட்டு பக்தர்களின் சார்பில், ஹிந்து தர்மார்த்த சமிதி 11 வெண்பட்டுக் குடைகளை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் சமர்ப்பித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான, ஸ்ரீ திருப்பதி திருக்குடை ஊர்வலம், சனிக்கிழமையான இன்று (செப்.28) பூக்கடை சென்ன கேசவ கோயிலில் இருந்து திருக்குடை ஊர்வலம் தொடங்கியுள்ளது.
திருமலை ஏழுமலையான் கோயில் வரும் செப்.18ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி 9 நாள்கள் நடைபெற உள்ளது. திருமலையில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் வழக்கமாக நடத்தி வருகிறது. நவராத்திரி நடைபெறும் சமயங்களில் இந்த பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, திருவோண நட்சத்திர தினத்தன்று நிறைவு பெறுகிறது.
இந்த உற்சவத்திற்காக திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் ஏழுமலையானுக்கு தமிழ்நாட்டில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை மற்றொன்று சென்னையில் இருந்து வெண்குடை, இந்த இரண்டு நிகழ்வும் தமிழகம் மற்றும் ஆந்திராவில் மிக விமர்சியாக நடைபெறும்.
11 வெண்பட்டு குடைகள்: 250 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து ஊர்வலமாகச் திருமலைக்கு எடுத்துச் செல்லப்படும். திருமலை ஏழுமலையான் கருடசேவைக்கான, வெண்பட்டு திருக்குடைகள். வைகுண்டத்தில் நாராயணனின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனே, பெருமாள் எழுந்தருளும்போது திருக்குடையாகிறார் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் திருமலையில் எழுந்தருளியுள்ள ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ கருடசேவையின்போது திருக்குடைகள் சென்னையில் இருந்து சமர்ப்பிக்கப்படுகின்றன.
250 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த திருக்குடை 1990க்கு பிறகு சில ஆண்டுகள் தடைபட்டது. பக்தர்களின் கோரிக்கை ஏற்று நின்றுபோன திருக்குடை உற்சவத்தை 2005ஆம் ஆண்டு முதல் ஹிந்து தர்மார்த்த சமிதி நடத்தி வருகிறது. அதன்படி 19ஆவது ஆண்டாக இந்த ஆண்டு திருக்குடை உற்சவ ஊர்வலம் ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் இன்று (செப்.16) மாலை தொடங்கியது. சென்னை பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோயிலில் 11 வெண்பட்டு குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதைத் தொடர்நது ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. மேலும் இந்த 11 குடைகளில் 2 குடைகள் திருச்சானூர் தாயார் சந்நிதியில் சமர்ப்பிக்கப்படும். மீதமுள்ள 9 குடைகள் திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின்போது சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.
இந்தநிகழ்ச்சியில், ஹிந்து தர்மார்த்த ஸமிதியின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம், அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜி ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை கமலக்கண்ணியம்மன் திருக்கோயில் தவத்திரு சச்சிதானந்தா ஸ்வாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், சென்னையில் இருந்து புறப்பட்ட 11-வெண்பட்டு குடைகள் பிரம்மோற்சவத்தின் அன்று அனைத்தும் திருமலையில் மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்கள பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்படும்.
இதையும் படிங்க: "சனாதனம் இந்துக்களின் நித்தியக் கடமை.. கருத்து சுதந்திரத்தை கொண்டு காயப்படுத்தாதீர்கள்" - சென்னை உயர்நீதிமன்றம்!