சென்னை: புடவையில் பெண்கள் அழகு என்றால் தாடி வைத்த ஆண்கள் அப்படி ஒரு அழகு. இன்றைய இளைய தலைமுறையினர் பலர் தாடி மீது அதீத ஆர்வம் கொண்டுள்ளனர். ஏன் ஆண்கள் மீது ஆண்களே பொறாமைப் படும் அளவுக்குத் தாடியின் மீதான காதல் அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். ஆனால் சிலருக்குத் தாடி வளராமலும், ஆங்காங்கே கொஞ்சம் வளர்ந்தும், கொஞ்சம் வளராமலும் இருக்கும். இது பலருக்கு பெரும் கவலையாகவே இருக்கின்றது. இது எதனால்? இதற்கு என்ன தீர்வு? என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தாடி வளராமல் இருக்க பொதுவான காரணங்கள்;
- தாடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பது குறைவது.
- மரபணு ரீதியான கோளாறுகள்
- தூக்கமின்மை
- சருமத்தைச் சுத்தமாக வைக்காமல் இருப்பது
- ஊட்டச்சத்துக் குறைபாடு
- அடிக்கடி தாடியை வெட்டுவது
தாடியை வளர வைக்க வழிமுறைகள்;
- தூசு மற்றும் அழுக்கு ஆகியவற்றால் முடி வளர்ச்சி தடைப்படலாம். எனவே, சருமத்தைச் சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருத்தல் வேண்டும்.
- ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். உங்கள் உணவில் வைட்டமின் பி, தாமிரம், மெக்னீஷியம், வைட்டமின் டி, இ, பி6, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சியைத் தூண்டக்கூடியவை.
- முகத்தில் மசாஜ் செய்வது முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், வைட்டமின் இ ஆயில் போன்றவற்றைப் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.
- தாடியின் அடர்த்தியை அதிகரிக்க ஜோஜோபா ஆயில் மசாஜ் மேற்கொள்ளலாம்.
- எலுமிச்சை மற்றும் இலவங்கப்பட்டை கலவையும் இயற்கையாகத் தாடி வளர உதவுகிறது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன, அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
- உடற்பயிற்சி முகத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
- அடிக்கடி தாடியை வெட்டுவதோ அல்லது ஷேப் செய்வதோ கூடாது. 4ல் இருந்து 6 வாரங்கள் வரை தாடியை வளரவிட வேண்டும்.
- தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்றவை முகத்தில் முடி வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, 8 மணி நேரம் உறக்கம் என்பது தாடி வளர்ப்பில் மிக முக்கியமாகும்.
- அடிக்கடி முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
- மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துவதால் தாடி மென்மையாக வளர வழிவகுக்கிறது. குறிப்பாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட மாய்ஸ்ட்ரைசர் பயன்படுத்துவது சிறந்தது.
தாடி வளர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்; பொதுவாகத் தாடி வைத்தால் ஆண்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முகத் துவாரங்கள் வலியாக அழுக்கு படிவதையும், சரும பாதிப்புகளையும் தடுக்கும். வெயிலின் தாக்கத்தில் இருந்து முகத்தைப் பாதுகாக்கும்.
தாடிக்கு ஷாம்பு பயன்படுத்தலாம்: கூந்தலின் அழுக்கை அகற்றவும், மிருதுத்தன்மைக்கும் ஷாம்புக்களை பயன்படுத்துவது போலவே தாடியின் வளர்ச்சிக்கும், பொலிவுக்கும் ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்தலாம். அதிக கெமிக்கல் இல்லாத தரமான ஷாம்பு, கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்.
மரபணு காரணத்தால் தாடி வளர்வதில் பாதிப்பு: இயல்பாகவே உங்கள் மரபணுவில் தாடி வளர்வதற்கான ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் உள்ளன. இந்த ஹார்மோன்கள் உடலில் சுரக்கும் அளவைப் பொறுத்து தாடியின் வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது.
அழகியல் துறையில் தொழிற்நுட்ப வளர்ச்சி முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், தாடியை வளரவைப்பதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. மேலும், அத்தகைய சிகிச்சை முறைகள் சற்று விலை உயர்வாக உள்ளதால் அவற்றை அனைவரும் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இதையும் படிங்க: தினை மாவுக்கு 5% ஜிஎஸ்டி... ஆல்கஹாலில் மாநில அரசுக்கு உரிமை..! - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு!