ETV Bharat / state

"எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" - காவல்துறை! - எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை

கலாஷேத்ரா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் இதுவரை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என்றும், புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை தெற்கு காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

Kalakshetra
கலாசேத்ரா
author img

By

Published : Mar 31, 2023, 4:45 PM IST

சென்னை தெற்கு காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் பேட்டி

சென்னை: சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் கலாஷேத்ரா கவின் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி மத்திய கலாசார அமைச்சகத்தின் நேரடி நிதி ஒதுக்கீட்டின்கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அண்மையில் புகார் எழுந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை கல்லூரி நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்தது.

இதனிடையே பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று(மார்ச்.30) முதல் கலாஷேத்ரா கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக மாணவிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

கலாஷேத்ரா மாணவிகள் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று(மார்ச்.31) சென்னை தெற்கு காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கலாஷேத்ரா கல்லூரியில் மாணவர்கள் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவிகள் எழுத்துப்பூர்வமாக எந்தப் புகாரும் இதுவரை தரவில்லை.

புகார் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் யாரும் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம். கலாஷேத்ராவில் போராட்டத்தின்போது நேற்று உயரதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

ஆர்.டி.ஓ விசாரணையும் நடத்தப்பட்டது. அப்போதும் எழுத்துப்பூர்வமாக யாரும் புகார் அளிக்கவில்லை. மாணவிகள் புகார் அளிக்காமல் இருந்தால், கல்லூரியில் உள்ள விசாரணைக்குழுவின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: Chennai Kalakshetra: கலாஷேத்ராவில் பாலியல் புகார்: மாநில மகளிர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.