ETV Bharat / state

அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும்! - rain in chennai

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

thunderstorms rain in tamil nadu  chennai meteorological department
அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும்!
author img

By

Published : May 11, 2020, 4:39 PM IST

Updated : May 11, 2020, 7:21 PM IST

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், “வெப்பச்சலனம் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று, இடியுடன்கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், மழைக்கு வாய்ப்பு இல்லை.

கடந்த 24 மணிநேரத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை சின்னக்கல்லாறில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகும்.

குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதனால் மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர் மாவட்டங்கள், திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்பதனால் அடுத்துவரும் தினங்களுக்கு விவசாயிகள், பொதுமக்கள் முற்பகல் 11:30 முதல் பிற்பகல் 03:30 வரை திறந்தவெளியில் வேலைசெய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி வரும் 13ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகக் கூடும்.

அந்தமான், நிகோபார் பகுதியில் வரும் 16ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 10ஆம் தேதி ஆவின் பால் பாக்கெட்டில் 12ஆம் தேதி என அச்சிடல் - சென்னையில் அதிர்ச்சி

Last Updated : May 11, 2020, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.