ETV Bharat / state

40 நிமிடங்களில் 3 இடத்தில் செயின் பறிக்க முயற்சி.. அச்சத்தில் மடிப்பாக்கம் மக்கள்! - மடிப்பாக்கம் காவல் நிலையம்

Chain Snatching: சென்னை மடிப்பாக்கம் பகுதியில் 40 நிமிடங்களில் தொடர்ந்து 3 நபர்களிடம் தங்கச் செயினை பறிக்க முயன்ற இரண்டு திருடர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Chain Snatching
சென்னையில் 40 நிமிடத்தில் 3 இடத்தில் செயின் பறிக்க முயன்ற கொள்ளையர்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 2:05 PM IST

சென்னையில் 40 நிமிடத்தில் 3 இடத்தில் செயின் பறிக்க முயன்ற கொள்ளையர்கள்

சென்னை: சென்னை மடிப்பாக்கம் ராஜலட்சுமி நகர் 2வது பிராதான சாலையில் வசித்து வருபவர் ராமலட்சுமி (43). கடந்த டிசம்பர் 13ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள், முதல் மாடியில் உள்ள இவரின் வீட்டிற்குச் சென்று, வீட்டில் இருந்த ராமலட்சுமியிடம் செயின் பறிக்க முயன்றுள்ளனர்.

அப்போது ராமலட்சுமி கூச்சலிட, உடனடியாக அந்த மர்ம நபர்கள் இருவரும் பயந்து போய் கீழே வந்து, அவர்கள் வந்த பல்சர் இருசக்கர வாகனத்தில் தப்பியோடிவிட்டனர். இதைத் தொடர்ந்து, மீண்டும் 7.10 மணியளவில் மின்வாரிய உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வரும் ஸ்ரீபிரியா (45) என்பவரிடம், ராஜராஜேஸ்வரி 4வது தெருவில் அந்த மர்ம நபர்கள் நகை பறிக்க முயன்றுள்ளனர். அதுவும் தோல்வியில் முடிந்த காரணத்தால், உடனடியாக இருவரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

பின்னர் 7.30 மணியளவில் சதாசிவம் நகர், பஜனை கோயில் தெருவில் ஐடி ஊழியரான அனிதா (29) என்பவர், அவரது வீட்டில் இருந்து அருகில் இருந்த அவரின் அம்மா வீட்டிற்கு நடந்து சென்றபோது, அந்த மர்ம நபர்கள் அனிதாவின் பின்னால் வந்து, அவரது செயினை பறிக்க முயன்றுள்ளனர். அதில் தடுமாறி அனிதா கீழே விழுந்த அனிதா கூச்சலிட்டதால், அங்கு ஆட்கள் வந்துள்ளனர். இதன் காரணமாக அந்த இடத்திலும் செயின் பறிக்க முடியாமல் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, பாதிக்கபட்ட அனைவரும் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அந்தந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்ததில், 40 நிமிடங்களில் மூன்று இடங்களில் செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டது ஓரே நபர்கள்தான் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மடிப்பாக்கம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக் கொண்டு, செயின் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட அந்த இரு திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த தொடர் சம்பவத்தால், மடிப்பாக்கம் பகுதி மக்கள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருச்சியில் பொது வெளியில் பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்த இளைஞர் கைது.. உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ள போலீசார் அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.