சென்னை அயனாவரம் பி.ஏ.கோயில் தெருவைச் சேர்ந்தவர், ரமேஷ். கடந்த 4 மாதங்களாக, அயனாவரம் என்எம்கே தெருவில் அன்னை ஏஜென்ஸி என்ற பெயரில் பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
நேற்று(ஜனவரி 11) கடைக்குச் சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த பெண்கள் அணியும் சுடிதார் டாப்ஸ் 4, பாடி ஸ்பிரே 1 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதனைக்கண்டு, அதிர்ச்சியடைந்த ரமேஷ், இது தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
காவல் துறையினர் அதே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.