சென்னை கிண்டியிலுள்ள சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில், ஏடிஜிபி அபய் குமார் தலைமையில் அனைத்து சிலைத் தடுப்புப் பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய சிலைத் தடுப்புப் பிரிவு ஐஜி அன்பு, எஸ்பி ராஜேஸ்வரி, அனைத்து மாவட்ட சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் டிஎஸ்பி, ஏடிஎஸ்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஐஜி அன்பு, “தமிழ்நாடு முழுவதும் சிலைக்கடத்தல் தொடர்பாக நிலுவையிலுள்ள வழக்குகளை எவ்வாறு விரைவாக முடிப்பது, மேலும் அலுவலர்கள் முனைப்பாக செயல்படுவதற்கு என்னென்ன தேவைகள் உள்ளன போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அடுத்த கட்டமாக ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களிடம் இருக்கும் வழக்குகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொன். மாணிக்கவேலிடம் கோரப்பட்டிருந்த நிலையில், எந்தவொரு ஆவணமோ விளக்கமோ அவரிடமிருந்து எங்களுக்கு வரவில்லை. எனக்கு உள்ள பணி அனுபவத்தை வைத்து உயர் அலுவலர்களின் ஆலோசனையை ஏற்று சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாகச் செயல்படுவேன்” என்றார்.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை... ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாது! - அரசுக்கு பொன் மாணிக்கவேல் கடிதம்!