ETV Bharat / state

சுஜித்தை வைத்து தீபாவளியை மறைக்க முயலுகின்றனவா ஊடகங்கள்? - விளக்குகிறார் மூத்த ஊடகவியலாளர் - theekkathir kumaresan on manual scavenging

ஆழ்துளைக் கிணறுகளில் ஏற்படும் உயிர்ப் பலி என்பது ஆண்டுகள் கடந்தும் நீடித்து வந்தாலும், இது குறித்த போதுமான புரிதலும் விழிப்புணர்வும் மக்களிடமும் இல்லை, ஆட்சியாளர்களிடமும் இல்லை. இது குறித்து மூத்த பத்திரிகையாளர் குமரேசனுடன் நமது ஈடிவி பாரத் நடத்திய உரையாடலின் தொகுப்பு இதோ...

Theekkathir Kumaresan
author img

By

Published : Oct 28, 2019, 10:32 PM IST

Updated : Oct 28, 2019, 10:45 PM IST

கேள்வி: குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் தற்போதுவரை சிறப்பாக நடந்து வந்தாலும், இறுதிக்கட்ட முயற்சியாக இப்போது பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களைத் தொடக்கத்திலேயே பயன்படுத்தியிருக்கலாம் என்ற ஆதங்கத்தைப் பலரும் வெளிப்படுத்துகிறார்களே?

பதில்: அனைவரின் சிந்தனையும் ஒன்றுதான். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் தங்களின் ஆழ்மன விருப்பமாக வெளிப்படுத்துகிறார்கள். இறை நம்பிக்கை உள்ளவர்கள் தாங்கள் நம்புகிற கடவுள்களிடம் மனமுருகி வேண்டுகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, அதே நேரத்தில் இது ஒரு அரிதான நிகழ்வு என்ற கண்ணோட்டமே அரசிடமும், அதிகார வர்க்கத்திடமும் இருக்கிறது. ஆகவேதான், இதற்கான முறைப்படுத்தப்பட்ட கொள்கை இன்னும் உருவாக்கப்படவில்லை.

2010ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாகக் கொள்கைகளும் சட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இன்னும்கூட மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, இது தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தவில்லை.

Theekkathir Kumaresan, தீக்கதிர் குமரேசன்
உச்ச நீதிமன்றம்

கொள்கை உருவாக்கப்பட்டால் பல்வேறு அம்சங்களும் இதில் சேர்ந்துவிடும். ஒவ்வொரு ஊரிலும் மண் தன்மை மாறுபடும். இது குறித்த பாரம்பரிய அறிவு அங்குள்ள உள்ளூர் மக்களுக்கே இருக்கும். அவர்களுடன் சேர்ந்து துறைசார்ந்த நிபுணர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இப்போது நடுக்காட்டுப்பட்டியில், முதலில் ஒன்றை முயல்கிறார்கள், அது சரிவரவில்லை என்றால் மாற்று ஏற்பாடு குறித்துச் சிந்திக்கிறார்கள். இதுவே, கொள்கை இருந்திருந்தால், மீட்புப் பணிகளில் எந்தெந்த கட்டங்களில் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் தயாராக இருந்திருக்க வேண்டும் என்பதில் தெளிவு இருக்கும்.

அதிகாரம் என்பது உள்ளாட்சி அமைப்புகளிடம் அளிக்கப்பட வேண்டும். மீட்புப் பணிகள் பயன்படுத்தப்படும் கருவிகள் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டும். இது எப்போதாவது நடக்கும் சம்பவம் என்று பார்க்காமல் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் சம்பவம் என்றே பார்க்க வேண்டும்.

ரிக் இயந்திரத்தை வரவழைப்பது போன்ற இறுதிக்கட்ட முயற்சிகளை நாம் முதல்கட்டத்திலேயே எடுக்க வேண்டும். அப்போதுதான், விலைமதிப்பில்லாத நேரம் வீணாவதைத் தடுத்து நிறுத்தலாம்.

இவையனைத்தையும் ஒருங்கிணைத்து கொள்கை உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்பட்டு அதன்படி செயல்பட வேண்டும். வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, கொள்கை இருந்தால்தான் தெளிவு இருக்கும்.

மூத்த பத்திரிகையாளர் குமரேசன்

கேள்வி: விண்வெளிக்கு நாம் ஆயிரம் கோடி செலவழிக்கிறோம். அது முக்கியம்தான் என்றாலும், ஏன் எளிய மக்களுக்குப் பயன்தரும் அறிவியலுக்குப் (ஆழ்துளையில் குழந்தைகள் சிக்கிக் கொள்வது போன்ற...) பெரிய கவனத்தை அரசு செலுத்துவதில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறதே?

தில்: விண்வெளி ஆய்வுக்கு நாம் செலவழிக்கத் தேவையில்லை என்றுகூட சிலர் கூறுகின்றனர். என்னைப் பொறுத்தவரை அதுவும் தேவைதான். செயற்கைக் கோள்கள் இருப்பதால்தான் நடுக்காட்டுப்பட்டியில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் பல்வேறு இடங்களிலிருந்தும் அறிந்து கொள்ளமுடிகிறது.

நம் கோரிக்கை ஒன்றுதான், அதற்கு நிதியை ஒதுக்கீடு செய்வதுபோல் ஏழை எளிய மக்களுக்குப் பயன்படும் அறிவியலுக்கும் உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

நமக்கு மேலே விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலும் என்ன உள்ளது என்று தெரிந்துவைத்திருக்கும் நாம், காலுக்குக் கீழ் என்ன உள்ளது என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது குறித்த ஆராய்ச்சிகளுக்கும் அரசுதான் முதலீடுகளைச் செய்ய வேண்டும்.

இப்போது நடைபெறும் ஆராய்ச்சிகள் இயற்கை வளங்களை எப்படி அழிப்பது என்பது குறித்துதான் நடந்து வருகிறதே தவிர, இயற்கையை எப்படிப் புரிந்துகொண்டு முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் இல்லை. அதற்கான விலையைத்தான் இப்போது நாம் கொடுத்துவருகிறோம். இது குறித்த அறிவு அறிஞர்களிடம் மட்டுமே தேங்கியிருந்து விடாமல் வெகு மக்களிடமும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

மீட்புப் பணிகள்

கேள்வி: அரசின் கொள்கை என்பது ஒருபுறமிருந்தாலும் ஆழ்துளைக் கிணறுகளை ஒழுங்காகப் பராமரிப்பது என்பது தனிமனிதக் கடமைதானே?

பதில்: கல்வியறிவு பெரும்பான்மை மக்களுக்குச் சென்று சேராத இந்தியா போன்ற சமூக அமைப்பு கொண்ட நாட்டில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முதல் பொறுப்பே அரசுடையதுதான்.

பல்வேறு விஷயங்களுக்குப் பரப்புரை செய்யும் அரசு, இதுபோன்ற விஷயங்களுக்குச் செய்யாமல் இருக்கக் காரணம், இது எப்போதாவது நடைபெறும் ஒரு சம்பவம் என்று நினைப்பதால்தான். அப்படியில்லாமல், இதுபோன்ற சம்பவம் எப்போதும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கருதியே அரசு பரப்புரையை தொடர்ந்து நிகழ்த்த வேண்டும்.

ஆழ்துளைக் கிணறு

கேள்வி: ஆழ்துளைக் கிணறு சம்பந்தமாக அரசின் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் இதுபோன்ற சம்பவங்கள் குறையுமா?

பதில்: 2010ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இது தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. இந்தியாவில் காற்று நுழையாத இடங்களில்கூட ஊழல் நுழைந்துவிடுகிறது என்பதற்கு ஏற்றார்போல, மேலிருந்து கீழ்வரை நிறைந்திருக்கும் ஊழலால்தான், சட்டங்களை அலுவலர்கள் முறையாகச் செயல்படுத்த முனைப்புக் காட்டுவதில்லை.

கேள்வி: ஒரு பிரச்னை என்றால் தற்காலிக உடனடி தீர்வு, பொறுமையாக நடைமுறைப்படுத்தப்படும் நிரந்தர தீர்வு என இரண்டு இருக்கும், இந்தச் சிக்கலில் நாம் முன்னெடுக்க வேண்டிய தீர்வுகள் என்ன?

பதில்: ஆழ்துளைக் கிணறு தோண்டப்படுவதே நீர் மேலாண்மையை நாம் ஒழுங்காகக் கடைப்பிடிக்காததால்தான். அரசு ஒரு பொதுநிலைத் தொட்டியை அமைத்து அனைவருக்கும் முறையாக ஊழலின்றி நீர் அளித்தால், எளிய மக்கள் ஏன் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்போகிறார்கள்? நீண்டகாலத் திட்டமாக அரசு இதைச் செய்ய வேண்டும்.

அதேபோல அவசரகால திட்டமாக அரசு கொள்கைகளை முறையாகவும் வேகமாகவும் வரையறுக்க வேண்டும்.

கழிவுநீர் தொட்டியில் இறக்கிவிடப்படும் மனிதர்கள்

கேள்வி: ஆழ்துளைக் கிணறுகள் போல எளிய மக்களின் உயிரைக் காவு வாங்கும் மற்றொரு பிரச்னை கழிவுநீர் தொட்டியில் மனிதர்கள் இறங்குவது. ஆழ்துளைக் கிணறுகள் குறித்து நாம் பேசிய அளவுக்குக்கூட கழிவுநீரில் இறங்கி மரணிப்போர் குறித்து ஏன் பேசுவதில்லை?

பதில்: நம் சமூக அமைப்பு எவ்வளவு வக்கிரம் பிடித்த ஒன்று என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இது. நமது கழிவுநீர்த் தொட்டிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கவும் சுத்தம் செய்யவும் காலம்காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே மலக்குழியில் இறக்கிவிடப்படுகிறார்கள். இது நாம் கடைப்பிடிக்கும் எழுதப்படாத ஒரு கொள்கையாகவே இருக்கிறது.

குமரேசன்

ஆனால், எழுதப்பட்ட நமது சட்டத்தில் இவ்வாறு செய்யக்கூடாது என்று இருந்தாலும், சமூகத்தில் ஊறிப்போயிருக்கும் சாதிய வன்மத்தால்தான் இதை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் உள்ளது.

கேள்வி: உலகமே சுஜித்துக்காக பிரார்த்திக்கும்போது, தீபாவளியை மறைக்க ஊடகங்கள் செய்யும் செயல் இது என சிலர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பரப்பிவருகின்றனரே?

பதில்: சுஜித் மீட்கப்பட வேண்டும் என்று மதங்களைக் கடந்தும் பலர் வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். மதவெறி ஊறிப்போனவர்களால் மட்டுமே இதுபோல பேச முடியும். விட்டால் குழந்தையை மற்றவர்கள்தான் தள்ளிவிட்டார்கள் என்றுகூட கூறுவார்கள் போலும்.

மதவெறி என்று ஒன்று இருந்தால், பிற மனிதர்களை நேசிப்பதிலிருந்து ஒருவர் எவ்வளவு தூரம் விலகிவிடுவார்கள் என்பதற்கு இதுவே உதாரணம். ஆனால் நம் மக்கள் இதைச் சுண்டுவிரலால் சுண்டி எறிந்து(எரித்து)விடுவார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை ஆழ்துளைக் கிணறுகளில் நடந்த விபத்து

Last Updated : Oct 28, 2019, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.