ETV Bharat / state

‘தற்காலிக அணுக்கழிவு மையமே நிரந்தரமாகிவிடும்’ - சுந்தர்ராஜன் எச்சரிக்கை!

சென்னை: ஆழ்நில அணுக்கழிவு மையம் ஒரு வேளை அமையாமல் போனால் கூடங்குளத்தில் அமையவிருக்கும் தற்காலிக அணுக்கழிவு மையமே நிரந்தரமாகிவிடும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருகிணைப்பாளர் சுந்தர்ராஜன் எச்சரித்துள்ளார்.

author img

By

Published : Jun 16, 2019, 12:07 AM IST

வுலகின் நண்பர்கள் அமைப்பு ஒருகிணைப்பாளர் சிறப்பு பேட்டி

இதுகுறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “இந்தியாவில் அணுக்கழிவுகளை நிரந்திரமாக வைக்கக்கூடிய ஆழ்நில அணுக்கழிவு மையம் (Deep Geological Repository DGR) முடிவு செய்யாமல் தற்காலிக ( Away From Reactor AFR) அணுக்கழிவுகள் சேமிக்கும் திட்டம் நிச்சயமாக ஆபத்தான போக்கு ஆகும்.

இந்நிலையில் ஆழ்நில அணுக்கழிவு மையம் ஒரு வேளை அமையாமல் போனால் கூடங்குளத்தில் அமையவிருக்கும் தற்காலிக அணுக்கழிவு மையமே நிரந்தரமாகிவிடும். கடற்கரை பகுதி, சுனாமி தாக்கிய பகுதியில் ஆழ்நில கருவூலம் அமைக்காமல் அணுக்கழிவுகளை சேமிப்பது மிகுந்த ஆபத்தானதாகும்.

எனவே இந்த தற்காலிக அணுக்கழிவு மையம் என்பது அமைக்கக்கூடாது என்று அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் இதுகுறித்து முதலமைச்சரை சந்தித்து பேச அனுமதி கோரியுள்ளோம். மேலும் அணுக்கழிவு தற்காலிக மையத்திற்கு தொடர்பாக எங்கள் தரப்பில் இருந்து சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஒருகிணைப்பாளர் சுந்தர்ராஜன் சிறப்பு பேட்டி

அணுஉலைகளை எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்தாலும், அது ஆபத்துக்குரியதுதான். எனவே தான் அணுசக்தி, அணுமின் நிலையங்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். உலகில் நில அதிர்வுகள் ஏற்படாத இடம் என்று எதுவும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதற்கு ஜப்பான் போன்ற நாடுகள் சிறந்த உதாரணாம். டிஜிஆர் அமைப்பதன் மூலம் நில அதிர்வுகள் தவிர்க்கப்படும் என்றாலும், இது செயல்படுவது மனிதசக்திக்கு அப்பாற்பட்ட செயல் ஆகும்” என்றார்.

Intro:nullBody:கூடங்குளம் அணுஉலை வளாகத்துக்குள் அணுக்கழிவுகளை சேமிப்பதற்கு எதிராக தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் பூவுலகின் நணபர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், ”இந்தியாவில் அணுக்கழிவுகளை நிரந்திரமாக வைக்கக்கூடிய ஆழ்நில அணுக்கழிவு மையம் (Deep Geological Repository DGR) முடிவு செய்யாமல் தற்காலிக ( Away From Reactor AFR) அணுக்கழிவுகள் சேமிக்கும் திட்டம் நிச்சயமாக ஆபத்தான ஒரு போக்கு. இந்தியா முழுவதும் அணுசக்திக்கு எதிரான மனநிலை மக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் ஆழ்நில அணுக்கழிவு மையம் ஒரு வேளை அமையாமல் போனால் கூடங்குளத்தில் அமையவிருக்கும் தற்காலிக அணுக்கழிவு மையமே நிரந்தரமாகிவிடும். கடற்கரை பகுதி, சுனாமி தாக்கிய பகுதியில் ஆழ்நில கருவூலம் அமைக்காமல் அணுக்கழிவுகளை சேமிப்பது மிகுந்த ஆபத்தானதாக மாறிவிடும். எனவே இந்த தற்காலிக அணுக்கழிவு மையம் என்பது அமைக்ககூடாது என்று அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.
இது சம்பந்தமாக அனைத்து கட்சிகளையும் சந்தித்து பேசி வருகிறோம். முதல்வரை சந்தித்து பேச் அனுமதி கோரியுள்ளோம். இது தொடர்பாக எங்கள் தரப்பிலிருந்து சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

அணுஉலைகள் எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்தாலும் அது ஆபத்துக்குரியது. எனவே தான் அணுசக்தி, அணுமின் நிலையங்களை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். உலகில் நில அதிர்வுகள் ஏற்படாத இடம் என்று எதுவும் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதற்கு ஜப்பான் போன்ர நாடுகள் சிறந்த உதாரணாம் .

டிஜிஆர் அமைப்பதன் மூலம் நில அதிர்வுகள் தவிர்க்கப்படும் என்றாலும் இது செயல்படுவது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு செயல். மனிதன் கட்டிய கட்டடத்தில் அதிக காலம் நிலைத்திருப்பது தஞ்சாவூர் பெரிய கோவில் என்று சொல்லுவோம். இந்நிலையில் 1 லட்சம் ஆண்டுகள் அணுக்கழிவுகளை சேமித்து வைப்பது என்பது எந்தளவுக்கு சாத்தியம் என்பது கேள்வியாக எழுந்துள்ளது” என்று தெரிவித்தார்.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.