சென்னை: கேகே நகர் பிடி ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கீதா. இவர் நடிகர் விஜயின் மாஸ்டர் மற்றும் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த 'வீட்ல விசேஷம்' (Veetla Vishesham) உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். அதே போல, இவர் சின்னத்திரையில் 'ஆனந்தராகம்' (Anandha Ragam) என்ற தொடர் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டு வாசலில் இருந்த இவரது காலனி உள்ளிட்ட பொருட்கள் சில தொடர்ந்து காணமல் போய் உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த இவர் நேற்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது உயர் ரக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு பின் காலால் அந்த செருப்பை லிப்டடில் தள்ளிவிட்டு திருடி சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: Actor Vijay: மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்.. அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்!
இந்த திருட்டுச் சம்பவம் பதிவான வீடியோவை சமூக வலைதளங்களில் நடிகை சங்கீதா வெளியிட்டுள்ளார். பாதுகாப்புக்காக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், இருவர் ரொம்ப கூலாக வீட்டிற்கு வந்து செருப்பை திருடிட்டு போராங்க. எதற்காக வந்தாகனு தெரியல, அது கிடைக்காதுதால் செருப்பை திருடி சென்று இருப்பதாகவும், எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வீடியோ குறித்த விளக்கங்களுடன் வெளியிட்டார்.
மேலும் வயதான தாய் மற்றும் குழந்தைகளோடு தனியாக இருப்பதால் இந்த திருட்டு சம்பவம் குறித்து கேகே நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: காஞ்சியில் ரூ.10 ஐந்து வகையான டிபன்.. அலைமோதிய மக்கள் கூட்டம்!