சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், “இலங்கை மக்களுக்காக கட்சியின் சார்பாக 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ம் கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் எக்காரணத்தைக் கொண்டும் தப்பி விடக்கூடாது என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். சம்பா பயிர் காப்பீட்டுக்கு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேபோல் சம்பா சாகுபடிக்கு காப்பீடு அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும், பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசே வழங்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்” என கூறினார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவியின் சடலம் அகற்றப்பட்டதாக கூறப்படும் வீடியோ - வைரல்!