ETV Bharat / state

காதலியுடன் ஊர் சுற்ற கால்வாய் மூடிகளை திருடி விற்பனை.. ரோமியோ இளைஞர் சிக்கியது எப்படி?

சென்னையில் காதலியுடன் வெளியே சுற்றுவதற்கு பணம் தேவைப்பட்டதால் மாநகராட்சிக்கு சொந்தமான 60-க்கும் மேற்பட்ட கால்வாய் இரும்பு மூடிகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். அந்த திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

chennai
கால்வாய் இரும்பு மூடிகளை திருடி விற்ற நபர்
author img

By

Published : Apr 5, 2023, 12:16 PM IST

Updated : Apr 5, 2023, 12:58 PM IST

"காதலியுடன் சுற்றுவதற்கு பணம் தேவை"; கால்வாய் இரும்பு மூடிகளை திருடி விற்ற நபர் கைது

சென்னை: அம்பத்தூர் பெருநகர் சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம் உட்பட்ட 7 பகுதிகளில் கழிவு நீர் பணிகள் நிறைவடைந்த நிலையில், விவேகானந்தா நகர் குமரன் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் கழிவுநீர் செல்வதில் அடைப்புகள் ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் அங்கு சென்ற அம்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் கால்வாய்களை சோதனை செய்ய சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கழிவுநீர் கால்வாய்களின் மேல் பொருத்தப்பட்டுள்ள கான்கிரீட் மற்றும் இரும்பு மூடிகளை அகற்றப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இவ்வாறு மூடாமல் இருக்கும் கால்வாய்களில் தேவையில்லாத பொருட்கள், குப்பைகள் விழுவதால் இந்த பகுதிகளில் கழிவு நீர் செல்வதில் அடைப்பு ஏற்பட்டதாகவும் பொது மக்களுக்கு தெரிவித்தனர். புதிதாக போடப்பட்டிருந்த இந்த கான்கிரீட் மூடிகளை யார் எடுத்துச் சென்றது என அந்த பகுதியில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்துக்கு இடமான சில வாலிபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து இந்த பகுதிகளில் இருக்கக் கூடிய மூடிகளை எண்ணிக் கொண்டிருந்தனர் என அந்த பகுதியில் இருக்கக் கூடிய ஒருவர் மாநகராட்சி அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அந்த இரும்பு முடிகளை திருடுவதை கண்டறிந்து கொரட்டூர் குற்றப்பிரிவினர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் சிசிடிவி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரட்டூர் குற்றப்பிரிவு போலீசார் அந்த இரண்டு மர்ம நபர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் புருஷோத்தம்மன் நகர் புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் மற்றும் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பதும் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதனிடைப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், இது போன்ற பல பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட முடிகளை திருடியதாகவும், காதலிலுடன் சுற்றுவதற்கு பணம் தேவைப்பட்டதால் இது போன்ற செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தன. இந்த நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பைக் திருட்டு, வீட்டு பூட்டை உடைத்து திருட்டு, கடை உடைக்கப்பட்ட பொருட்கள் திருட்டு என பல்வேறு திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் புதுவிதமாக காதலுக்காக சென்னை மாநகராட்சி கழிவுநீர் கால்வாய் மூடிகளை திருடி விற்பனை செய்த அந்த நபர்களின் வினோத வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கைதிகள் பல் பிடுங்கிய விவகாரம்: போலீசார் கூண்டோடு மாற்றம்!

Last Updated : Apr 5, 2023, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.