சென்னை புதுவண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சக்திவேல் என்பவரது மகள் அனிதா (20). இவர் செவிலியர் பட்டயப் படிப்பு படித்து முடித்துவிட்டு சௌகார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
இன்று (அக்.17) காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டில் யாரும் இல்லாதபோது வாளியில் வெந்நீர் போடுவதற்காக மின்சார ஹீட்டரை போட்டுள்ளார். அப்போது தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை கையை வைத்து பார்க்கும் போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.
டீக்கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்த தாய் மயக்கமான நிலையில் அனிதாவை கண்டவுடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு - அதிர்ச்சி காணொலி!