மலேசியா சிலாங்கூர் நகரில் மே 19ஆம் தேதி சர்வதேச கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில் சென்னையிலிருந்து கராத்தே மாஸ்டர் கார்த்திகேயன் தலைமையில் kids and punch கராத்தே பள்ளியில் இருந்து நான்கு மாணவிகள் மற்றும் மூன்று மாணவர்கள் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு 4 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் என் மொத்தம் 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
மலேசியாவில் இருந்து வீரர்கள் இன்று சென்னை திரும்பினர். அப்போது, மாஸ்டர் கார்த்திகேயன் கூறுகையில், "இடைவிடாத பயிற்சி மற்றும் மாணவர்களின் முயற்சியால்தான், 13 பதக்கங்களை வெல்ல முடிந்தது. மலேசியா சென்று பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் அனைவரும் அவசியமாக தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும். படிப்பிற்குப் பிறகு நிச்சயமாக தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும். ஏழ்மை பின்னணியில் உள்ள வீரர்களுக்கு தமிழ்நாசு அரசு உதவினால், பல வெற்றிகளை குவிக்க உதவியாக இருக்கும்" என்றார்.