ETV Bharat / state

கள்ளக்குறிச்சி சம்பவம் பயங்கரவாதம் - பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் பயங்கரவாதம் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் சம்பவம் தீவிரவாதம் - பாஜக மாநில துணை தலைவர் ராமலிங்கம்

author img

By

Published : Jul 21, 2022, 7:21 PM IST

சென்னை: கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, முருகானந்தம், கார்த்தியாயினி, சரவணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் இன்று சந்தித்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், "தமிழ்நாட்டில் நடைபெறும் தேச விரோதச்செயல்கள் குறித்து ஆளுநரிடம் புகாரளித்துள்ளோம். தேச விரோதச்செயல்கள், தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழ்நாட்டில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. பயங்கரவாதிகளுக்குப் போலியாக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதற்கு காவல்துறை அலுவலர்கள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி சம்பவம் பயங்கரவாதம் - பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம்

விமானப்படை தளபதி வீட்டு முகவரியிலேயே போலியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேல் போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் மட்டும் 72 பேருக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

டேவிட்சன் தேவாசீர்வாதம் போன்ற தவறான அலுவலர்கள் உளவுத்துறையில் இருந்ததால் தான் போலி பாஸ்போர்ட், கள்ளக்குறிச்சி கலவரம் உள்ளிட்டச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உடனடியாகப் பணி நீக்கம் செய்து, அவரை விசாரிக்க வேண்டும்.

இதுகுறித்து ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆதாரப்பூர்வமாக புகார் மனு அளித்துள்ள நிலையில் ஆளுநர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். தமிழ்நாடு பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற்று முடிந்த ஐ.பி.எஸ்., அலுவலர்கள் மாற்றம் என்பது நிர்வாக ரீதியிலான மாற்றம் மட்டுமே.

தவறு செய்த அலுவலர்களை தமிழ்நாடு அரசு பாதுகாத்து வருகிறது. ஒழுங்கற்றவர்களை தலைமை பீடத்தில் வைத்திருப்பது தான் தவறுகளுக்கு காரணம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவை மீறி பெற்றோர் இல்லாமல் மறு உடற்கூராய்வு; உயர் நீதிமன்றத்தில் மாணவி தந்தை தரப்பு வாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.