ETV Bharat / state

‘புராஜெக்ட் கே’ இல் பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்ஹாசன்! தலைப்பை அறிவித்த படக்குழு! - Project K

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் ராணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படத்திற்கு கல்கி 2898 ஏ.டி எனப் பெயரிடப்பட்டு உள்ளது.

நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படத்திற்கு கல்கி 2898 ஏ.டி எனப் பெயரிடப்பட்டு உள்ளது.

author img

By

Published : Jul 21, 2023, 1:31 PM IST

நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படத்திற்கு கல்கி 2898 ஏ.டி எனப் பெயரிடப்பட்டு உள்ளது.

சென்னை: பாகுபலி நாயகன் பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு மிகப் பெரிய நடிகராக மாறி உள்ளார். தயாரிப்பாளர்கள் இவர் மீது நம்பிக்கை வைத்து பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து உள்ளனர். காஸ்ட்லி நடிகரான பிரபாஸை வைத்து மிகப் பிரமாண்டமான திரைப்படங்கள் தற்போது தயாராகி வருகின்றன. அதில் சமீபத்தில் வெளியான ‘ஆதி புருஷ்’ படமும் அடக்கம். இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்த போதிலும், வசூலில் சாதித்தது.

இதனைத் தொடர்ந்து கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்திலும் பிரபாஸ் நடித்து உள்ளார். மேலும் இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் ஃபிக்சன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மிகப் பெரிய நடிகர்‌ பட்டாளம் இணைந்து உள்ளது. ‘புராஜெக்ட் கே’ என தற்காலிமாக பெயரிடப்பட்டு உள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

மொத்த இந்திய ரசிகர்களாலும் கொண்டாடப்படும் இந்தப் படத்தில் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடிக்கிறார்கள். தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் இந்தப் படத்தை தயாரிக்கின்றது. இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இதையும் படிங்க: சினிமாவில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது - நடிகர் சந்தானம் அறிவுரை

நடிகர் கமல் ஹாசன் ‘புராஜெக்ட் கே’ படத்தில் இணைந்து உள்ளதால், இந்தியத் திரையில் மிகப்பெரும் நட்சத்திர ஆளுமைகள் பங்கேற்கும் படைப்பாக இப்படம் விஸ்வரூபமெடுத்து உள்ளது. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் புனைவு கதை படைப்பு தான் ப்ராஜெக்ட் கே. இதன் தலைப்பு சான் டியாகோ காமிக்கானில் உள்ள ஐகானிக் ஹெச் ஹாலில் பிரம்மாண்டமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

புராஜெக்ட் கே படத்திற்கு கல்கி 2898 ஏ.டி என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி தலைப்பு அறிவிப்பு குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. மிகப் பெரிய கிட்டத்தட்ட ரூபாய் 600 கோடி முதலீட்டில் இப்படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள இப்படம் உலகளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: காதலித்து ஏமாற்றியதாக விக்ரமன் மீது புகார் - கமிஷனர் அலுவலகம் வரை சென்ற விவகாரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.