ETV Bharat / state

'இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு பின்பற்றாதது சமூக நீதிக்கு எதிரானது!' - மருத்துவத்துறையில் காலிப்பணியிடங்கள்

மருத்துவத் துறை பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு பின்பற்றாதது சமூக நீதிக்கு எதிரானது எனவும், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Dec 14, 2021, 7:07 PM IST

சென்னை: சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் கூறுகையில், "அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் உள்ள இரண்டாயிரத்து 448 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், சுகாதார ஆய்வாளர்களுக்கான பணியிடங்களுக்கும், நான்காயிரத்து 848 செவிலியர் பணியிடங்களுக்கும் என மொத்தமாக ஏழாயிரத்து 296 பணியிடங்களுக்கான பணிநியமனங்களைச் செய்வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

பணிநியமனங்கள் மாவட்ட அளவில் நடத்தப்படும் எனவும் மாநில நலவாழ்வுச் சங்கம் மற்றும் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த அறிவிப்பில், இந்தப் பணியிடங்கள் ஒப்பந்த, தற்காலிக அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இப்பணியில் சேர விரும்புவோர் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு அறிவிப்பு

உழைப்புச் சுரண்டல்

இந்தப் பணியிடங்களுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது பற்றிய அறிவிப்பு தெளிவாக இல்லை; இது கவலை அளிக்கிறது. ஒப்பந்தம், தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யும்பொழுது இட ஒதுக்கீட்டை கடைப்பிடித்திட வேண்டும்.

நிரந்தர அடிப்படையில் இல்லாத தற்காலிக அடிப்படையிலான, ஒப்பந்த அடிப்படையிலான அல்லது குறிப்பிட்ட கால நிர்ணய அடிப்படையிலான (limited time basis), வெளிக் கொணர்தல் அடிப்படையிலான, மத்திய, மாநில அரசுகளின் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய சமூக நீதித் துறை அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல் உள்ள போதிலும், தேசிய சுகாதார இயக்கம் மூலம், தமிழ்நாடு அரசு பணிநியமனம் செய்யும்பொழுது, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது. இது இட ஒதுக்கீடு உரிமைபெற்ற பிரிவினரின் நலன்களுக்கு எதிரானது. சமூக நீதிக்கு எதிரானது.

தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மருத்துவத் துறையில் பணி நியமனங்கள் அதிக அளவில் ஒப்பந்தம், தற்காலிக அடிப்படையிலும் மிகக் குறைந்த தொகுப்பூதியத்திலும் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய பணி நியமனங்கள் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கிறது.

இது பணியாளர்களின் நலன்களுக்கு எதிரானது. இந்நிலையில் இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்தாதது பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் எதிராக அமைந்துவிடும்.

சமூக நீதியைக் காத்திட நடவடிக்கை

எனவே, தமிழ்நாடு அரசு இந்த ஏழாயிரத்து 296 பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதோடு, இப்பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் நியமித்திட முன்வர வேண்டும்.

இந்தப் பணிநியமனங்கள் மாவட்ட அளவில் தனித்தனியாக நடத்தப்பட இருக்கின்றன. இவ்வாறு மாவட்ட அளவில் பணிநியமனங்களை செய்வது பல்வேறு குழப்பங்களுக்கும், முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஒரு நபர் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் பணிபுரிய தயாராக இருக்கலாம்.

எனவே, இப்பணி நியமன அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு, சமூக நீதியைக் காக்கும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு, மருத்துவப் பணியாளர்கள் பணிநியமன வாரியம் மூலம் தேர்வு நடத்தி, இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்தி, மாநில அளவில் பணிநியமனங்களைச் செய்திட வேண்டும். சமூக நீதியைக் காத்திட தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: காங். கட்சியை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைந்துவிடலாம்! - அண்ணாமலை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.