ETV Bharat / state

மதுரை ரயில் தீ விபத்து.. லக்னோ செல்ல சென்னை விமான நிலையம் வந்த 9 சடலங்கள்!

மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

லக்னோ செல்ல சென்னை விமான நிலையம் வந்தடைந்த 9 உடல்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 11:28 AM IST

லக்னோ செல்ல சென்னை விமான நிலையம் வந்தடைந்த 9 உடல்கள்

சென்னை: இந்தியாவையே உலுக்கிய மதுரை ரயில் நிலைய தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று (ஆகஸ்ட். 26) நிறுத்து வைக்கப்பட்டு இருந்த சுற்றுலாப் பயணிகளின் ரயில் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து, ரயிலில் பற்றிய தீ அருகே இருந்த மற்றொரு ரயிலுக்கும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் தீ பற்றிய ரயிலில் இருந்து பலரும் உயிர் தப்பிய நிலையில், சிலர் மட்டும் வெளியேற வழியின்றி ரயிலின் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். சம்பவத்தைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ரயில் பெட்டிகளில் பரவிய தீயை போராடி அணைத்தனர்.

இருப்பினும், இந்த விபத்தில் 5 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கான முக்கிய காரணமாக, ரயிலில் சட்ட விரோதமாக சிலிண்டரை பயன்படுத்தியதே என ரயில்வே தரப்பில் இருந்து விபத்தின் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் உயிரிழந்த 9 பேரில், 7 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், மீதம் உள்ள இரண்டு பேர் குறித்த விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்து, பின்னர் எம்பாமிங் செய்யப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

விபத்தில் இறந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மூன்று ஆம்புலன்ஸ் மூலம் 9 பேரின் உடல்களும் மதுரையில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து அடைந்தது.

பின்பு, சென்னை விமான நிலையம் வந்தடைந்த உடல்கள் இண்டிகோ கார்கோவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு சென்னை - லக்னோ விமானத்தில் ஐந்து உடல்களும், 2 மணிக்கு நான்கு உடல்களும் பெங்களூர் வழியாக லக்னோவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், உயிரிழந்த ஒன்பது பேர் உடல்களும் லக்னோ சென்ற பிறகு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையம் சற்று பரபரப்புடன் காணப்படுகிறது.

இதையும் படிங்க: Madurai train fire: ரயில் தீ விபத்தில் பலியான 9 பேரின் உடல்கள் ஒப்படைப்பு.. அமைச்சர் பி.டி.ஆர் இறுதி அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.