சென்னை: வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர், A.G.S காலணியை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் பரமேஸ்வரி ஆகிய இருவரும் சேர்ந்து, ராக்டவுள் ஆட்டோ மொபைல்ஸ் கியர் பர்ச்சேஷ் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிதி நிறுவனங்கில் முதலீடு செய்பவர்களுக்கு 30% வட்டியும், ஊக்கத்தொகையாக 6% கொடுப்பதாகவும் விளம்பரம் செய்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நபரிடமிருந்து 5,80,000 ரூபாயை வசூல் செய்துள்ளனர். இந்நிலையில் முதலீட்டாளருக்கு வட்டி சரிவர வராத காரணத்தினால், அலுவலகம் சென்று பார்த்த போது நிறுவனம் மூடப்பட்டு, இருவரும் தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து முதலீட்டாளர்களின் புகாரின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மோசடி செய்து தலைமறைவான இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வருவதாலும், குற்றவியில் நடுவரால், தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சுவரைத் துளையிட்டு 200 பவுன் நகை கொள்ளை..அரியலூர் போலீசார் விசாரணை