இது குறித்து அவர் கூறுகையில், ”பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, நாளை முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . அக்டோபர் 3ஆம் தேதி 8ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான சுமார் 2 கோடி விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் மாவட்டங்களுக்கும் தற்போதே சென்றுவிட்டன.
அதேபோன்று 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே முக்கிய பாடங்களில் ஒரு தொகுதி பாட புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டன . தற்போது இரண்டாம் தொகுதி பாட புத்தகங்கள் தயாராகி விட்டதால் அந்தப் பாட புத்தகங்களும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காலாண்டு விடுமுறைக்கு பிறகு அந்த பாட புத்தகங்களும் வழங்கப்படும்” என்றார்.