ETV Bharat / state

ஆசிரியர் தகுதித் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு - டெட் தேர்வு

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

tet
author img

By

Published : May 26, 2019, 1:19 PM IST

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி மாலை ஐந்து மணி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் எழுதுவதற்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், இரண்டாம் தாள் எழுதுவதற்கு நான்கு லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் என ஆறு லட்சத்து நான்காயிரத்து 156 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான தகுதித் தேர்வு ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது பயனர் அடையாளம் (யூசர் ஐடி), கடவுச்சொல் பதிவு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை பிரிண்ட் எடுத்து தேர்வறைக்கு கொண்டு வரவேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் 32 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களின் விவரமும், மாவட்ட கல்வி அலுவலகத்தின் தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை,
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மார்ச் 15 ந் தேதி முதல் ஏப்ரல் 12 ந் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 எழுதுவதற்கு 1,83,341 பேரும், தாள் 2 எழுதுவதற்கு 4,20,815 பேரும் என 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் . இவர்களுக்கான தகுதித் தேர்வு ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.  
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2019 ம் ஆண்டிற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1  8.6.2019 மற்றும் தாள்-2 க்கான தேர்வு 9. 6.2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இத்தகுதித் தேர்விற்கு உரிய நுழைவுச்சீட்டு  ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்  
 -ல் தேர்வர்கள் தங்களது  யூசர்ஐடி  மற்றும் கடவுச்சொல்  பதிவு
செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்பொழுது ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை பிரின்ட் எடுத்து தேர்வறைக்கு கொண்டு வரவேண்டும்  என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் 32 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களின் விபரமும், மாவட்ட கல்வி அலுவலகத்தின் தொடர்பு எண்களும் அளிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.