ETV Bharat / state

"திட்டமிட்டபடி நாளை போராட்டம்... அமைச்சரைச் சந்திக்க வேண்டியதில்லை" - டிட்டோ ஜாக் அறிவிப்பு - Teachers protest

Teachers protest: 30 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நாளை நடத்த திட்டமிட்டுள்ள ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தின்போது அமைச்சரைச் சந்திக்க வேண்டியதில்லை என டிட்டோ ஜாக் அமைப்பு தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 9:26 AM IST

Updated : Oct 12, 2023, 11:02 AM IST

சென்னை: இது தொடர்பாக தமிழக தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், டிட்டோ ஜாக் அமைப்பின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினருமான சி.சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “30 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 13.10.2023 அன்று நடத்திட திட்டமிட்டுள்ள கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் ஆசிரியர்கள் தயாராகிக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அதிகாரப்பூர்வ அழைப்பு இல்லாதபோது அமைச்சரைச் சந்திப்பது, களத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். ஆசிரியர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நாம் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று உயர்மட்டக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் எனக்கு தெரிவித்த கருத்தின் அடிப்படையில், அமைச்சரைச் சந்திக்க வேண்டியதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராட்டக் களத்தில் சந்திப்போம்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (அக்.13) போராட்டம் நடத்துவது என அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்கக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த விதமான உடன்பாடும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிட்டோ ஜாக் அமைப்பினர், ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் 11 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை (டிட்டோ ஜாக்) இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திட்டமிட்டப்படி அக்.13ல் தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்: டிட்டோ ஜாக் அறிவிப்பு

Last Updated : Oct 12, 2023, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.