ETV Bharat / state

முதுகலை ஆசிரியர் தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு! - ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம்

சென்னை : முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணிக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம்
author img

By

Published : Sep 17, 2019, 9:27 PM IST

தமிழ்நாட்டில், பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 24ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது. அதன்படி முதுகலை ஆசிரியர் பணி, உடற்கல்வி இயக்குனர் நிலை 1-ன் பணிக்கு சுமார் ஒரு லட்சத்து 80ஆயிரம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுகலை ஆசிரியர் தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது

இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2018-19ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை 1-ன் பணிக்கான கணினி வழி தேர்வு வரும் 27, 28, 29ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளமான www.trb.tn.nic.in என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பிரின்ட் அவுட் எடுத்து தேர்வு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடன், விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தில் அசல் பிரதியையும் தவறாமல் எடுத்து வர வேண்டும். தேர்வர்கள் தேர்வு நாளன்று காலையில் நடைபெறும் தேர்விற்கு காலை 7.30 மணிக்குள்ளும், மாலையில் நடைபெறும் தேர்விற்கு மதியம் 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகை புரிய வேண்டும்.

மேலும், கணினியின் மூலம் நடைபெறும் ஆன்லைன் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சென்று கம்ப்யூட்டர் பயிற்சியை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க :

தேனி அருகே கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத மறுக்கப்பட்ட மாணவி

Intro:முதுகலை ஆசிரியர் தேர்வு
ஹால் டிக்கெட் வெளியீடு

Body:முதுகலை ஆசிரியர் தேர்வு
ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை,

முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணிக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்குரிய ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 24 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.

இந்த அறிவிப்பின் மூலம் 2144 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பம் பெறும்போதே அறிவித்திருந்தது.

அதன்படி முதுகலை ஆசிரியர் பணி மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணிக்கு சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 27 ,28,29 ம் தேதி ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.
செப்டம்பர் 27 ந் தேதி இயற்பியல், வரலாறு ஆகிய பாடங்களுக்கு காலையிலும், 27-ஆம் தேதி மதியம் விலங்கியல், பொருளியல், தாவரவியல் ,உடற்கல்வியியல், புவியியல், ,மனை அறிவியல், அரசியல் அறிவியல், இந்திய கலாச்சாரம் ஆகிய பாடங்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது.

28 ம் தேதி காலையில் ஆங்கிலம் பாடத்திற்கும், மாலையில் உயிர் வேதியியல், நூண்ணூயிரியல், வணிகவியல், வேதியியல் பாடத்திற்கும் ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது.
29 ஆம் தேதி காலையில் தமிழ் பாடத்திற்கும், மாலையில் கணித பாடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடைபெற உள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2018- 19 ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணிக்கான கம்ப்யூட்டர் வழி தேர்வு வரும் 27, 28, 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு உரிய அனுமதிச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளமான www.trb.tn.nic.in என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பிரின்ட் அவுட் எடுத்து தேர்வு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடன், விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தில் அசல் பிரதியையும் தவறாமல் எடுத்து வர வேண்டும்.

தேர்வர்கள் தேர்வு நாளன்று காலையில் நடைபெறும் தேர்விற்கு காலை 7.30மணிக்குள்ளும், மாலையில் நடைபெறும் தேர்விற்கு மதியம் 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகை புரிய வேண்டும்.

கம்ப்யூட்டர் மூலம் நடைபெறும் ஆன்லைன் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சென்று கம்ப்யூட்டர் பயிற்சியை மேற்கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.