சுற்றுலாவை பிரபலபடுத்தும் நோக்கில் சுற்றுலா துறை சார்பில் புதிதாக சுற்றுலா தலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி முதலியார்குப்பம் படகு குழாமில் வார விடுமுறை, அரசு விடுமுறை நாட்களில் படகு சவாரிக்கு அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலதரப்பட்ட படகுகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த படகு குழாமிற்கு சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் இரண்டு மணி நேரம் படகு சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்படுகிறது.
அன்றைய தினம் காலை வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து குளிர்சாதன சொகுசு பேருந்து புறப்பட்டு மகாபலிபுரம் தமிழ்நாடு ஓட்டலில் காலை உணவு வழங்கப்படுகிறது. மதிய உணவு, மாலைநேர சிற்றுண்டி முதலியார் குப்பத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை உணவுக்கு பிறகு மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றிப் பார்த்த பின்பு மதியம் 1:30 மணிக்கு முதலியார் குப்பம் படகு குழாமில் மதிய உணவு வழங்கப்படும். படகு சவாரி முடிந்த பிறகு மாலை ஐந்து மணிக்கு மீண்டும் சென்னை வந்தடையும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தொலைபேசி எண்களான, 04425333333/25333444 ஆகியவற்றிலும், www.ttdconline.com என்ற இணையத்தளத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு சுற்றுலா துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:‘பாஜக கூட்டணி குறித்து தலைமைதான் முடிவு செய்யும்’ - அமைச்சர் காமராஜ்