ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையில் காரை குறிவைத்து கொள்ளை - காவல் துறை அளித்த விளக்கம்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் காரினை குறி வைத்து நூதன முறையில் கொள்ளையடிப்பதாக வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் வதந்தி என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jun 2, 2023, 8:12 AM IST

police
காவல்துறை

சென்னை: கடந்த மே 28ஆம் தேதி இரவு 11 மணி அளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி டோல்கேட் அருகில் ஒரு குடும்பம் காரில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது முன்னால் சென்ற கனரக வாகனத்தின் ஸ்டெப்னி டயர் கழன்று விழுந்து காரின் முன்பக்க கதவு சேதம் அடைந்ததாக புகார் எழுந்தது.

அதேபோல் அன்று இரவு 10.45 மணி அளவில் காரில் சென்ற நபரின் கார் கண்ணாடி மீது ஒருவர் கல் எரிந்து சேதம் அடைந்ததாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டோர் அவசர எண் 100ஐ தொடர்பு கொண்டபோது, அப்பகுதியில் இணைப்பு கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

மேலும், செங்குறிச்சி சோதனைச் சாவடி அருகே செல்லக் கூடிய கார்களை அடிக்கடி குறி வைத்து ஒரு கும்பல் நூதன முறையில் கொள்ளையடிக்க முயலும் சம்பவம் தொடர்ச்சியாக நிகழ்வதாக சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டது வந்தது. இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கும்பல் கொள்ளை அடிக்க முயல்வதாக பரப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு காவல் துறை சார்பில் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, இந்த சம்பவங்கள் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அந்த முதற்கட்ட விசாரணையில், குற்றம் புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் இச்சம்பவங்கள் நடைபெறவில்லை எனவும், அவசர எண் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏதும் உள்ளதா என்பதை சோதித்து பார்த்த போதும் கூட எந்த விதமான சிரமமும் இல்லை என தெரிய வந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு மண்டலத்தில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையானது, 4 மாவட்டங்களை கடந்து செல்வதாகவும், இந்த தேசிய நெடுஞ்சாலையில் 21 காவல் நிலையங்கள், 12 ரோந்து வாகனங்கள், 5 சுங்கச் சாவடிகள் மற்றும் 2 சோதனைச் சாவடிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், செங்குறிச்சி சோதனைச் சாவடி அருகே காரினை குறி வைத்து ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயல்வதாக பரப்பப்பட்ட செய்தி முற்றிலும் தவறானவை.

மேலும், பொதுமக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வடக்கு மண்டல காவல் துறையினர் போதுமான பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றது எனவும் தமிழ்நாடு காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மொபைல் எண்களுக்கு குறி.. நைஜீரிய சைபர் கிரைம் கும்பல் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.