இயேசு உயிர்த்தெழுந்த நாளை முன்னிட்டு கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஈஸ்டர் நன்னாளில், எனது இதயம் நிறைந்த வணக்கத்தையும், நல்வாழ்த்துகளையும், நம்முடைய கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பண்டிகையானது, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவைப் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்து மனித குலத்தின் மீட்பராகவும், அன்பு, சமாதானம், இரக்கம், மன்னிப்பு ஆகிய உயரிய பண்பு நலன்களை மனித சமுதாயத்தின் ரட்சிப்பிற்கான புதிய பாதையாக ஏற்படுத்தி அனைவரின் வாழ்வையும் ஒளிரச் செய்துள்ளார்.
இந்த ஈஸ்டர் தினத்தில் நாம் அனைவரும் நம்மைப் பிரிக்க சூழ்ச்சி செய்திடும் வெறுப்பு, பேதம், பாகுபாடு ஆகிய சக்திகளை முறியடித்து, நம்மை ஒருங்கிணைக்கச் செய்திடும் சக்திகளான அன்பு, மதிப்பளித்தல், சமத்துவம் ஆகிய சிறந்த பண்பு நலன்களைக் கொண்டு புதிய உலகத்தை அமைத்திட நாம் யாவரும் உறுதி எடுத்துக் கொள்வோமாக.
மேலும், உயர்த்தெழுந்த புனித தினத்தில், நாம் அனைவரும் அமைதி, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்ந்தோங்கச் செய்து, ஒளிமயமான எதிர்காலத்தை மனித சமுதாயத்திற்கு அளித்திட முன்வருவோமாக” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’இருள் அகலும் ஒளி தோன்றி நம்மை மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும்’ - அதிமுகவின் ஈஸ்டர் வாழ்த்து