ETV Bharat / state

’பாத்திமாவின் தற்கொலைக்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ - cause of iit student Fathima latheef's suicide

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

Tamilnadu Government must clarify the cause of iit student Fathima latheef's suicide
author img

By

Published : Nov 15, 2019, 8:26 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தற்கொலைகள் தொடர்கதையாகும் ஐஐடியில், மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கு காரணம் என்னவென்று தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஐஐடி நிர்வாகமும், அதனை நடத்தும் மத்திய அரசும் இதற்கு பதில் கூற வேண்டும். கல்வி பயிலும் இடத்தில் தற்கொலைக்கான காரணம் என்ன?, எந்தவிதமான துன்புறுத்தல்கள் அங்கு நடக்கின்றன?, தற்கொலை செய்யும் அளவிற்கு இளம் தலைமுறைகள் ஏன் செல்கிறார்கள்? என்பது குறித்தும் நாம் ஆராய வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல் ஆணையச் செயலாளரை மாற்றுவதென்பது உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு எதிரானது. அவர் எதற்காக மாற்றப்பட்டார் என்பதற்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும். என்னுடைய சந்தேகமெல்லாம், தமிழ்நாடு அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஏதாவது பிரச்னை வராதா என அவர்கள் காத்திருக்கிறார்கள்” என்றார்.

கே எஸ் அழகிரி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், ”ரஃபேல் விவகாரத்தைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் ஒரு பக்கத்தை மட்டுமே ஊடகங்கள் காட்டுகின்றன. விமானங்களை கொள்முதல் செய்ய நேரடியாக பிரதமரே செல்லக் காரணம் என்ன என்பதுதான் காங்கிரசின் கேள்வி. பேரம் குறித்த ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்படைக்கத் தயாரா?, விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்தது ஏன்?, இவையனைத்திற்கும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு!

Intro:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிப் தலைவர் கே எஸ் அழகிரி சென்னை விமானநிலையத்தில் பேட்டி

Body:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிப் தலைவர் கே எஸ் அழகிரி சென்னை விமானநிலையத்தில் பேட்டி

ஐஐடியில் மாணவி பாத்திமாவின் தற்கொலைக்கு காரணம் என்னவென்று தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் ஏனென்றால் தொடர்ச்சியாக 12 தற்கொலைகள் அங்கு நடந்து உள்ளது

உயர்கல்வி படிக்கும் இடத்தில் தற்கொலைக்கான காரணம் என்ன எந்தவிதமான துன்புறுத்தல்கள் அங்கு நடக்கின்றன தற்கொலை செய்யும் அளவிற்கு இளம் தலைமுறைகள் ஏன் செல்கிறார்கள் இதற்கு எந்தவிதமான பின்புலம் இருக்கிறது என்பதை ஆராய வேண்டும்

ஐஐடியில் படிக்கும் அனைவரும் உயர்ந்த இடத்திற்கு செல்லக் கூடியவர்கள் அறிவில் சிறந்தவர்கள் அங்கு தற்கொலை செய்து கொள்கிற அளவிற்கு பாதுகாப்பின்மை இருக்கிறது என்றால் ஐஐடி நிருவாகமும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நின்ற தமிழக அரசும் ஐஐடிக்கு பொறுப்பான மத்திய அரசும் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பது எனது கருத்து என தெரிவித்தார்

ஐஐடி பிரச்னையை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் மத்திய அரசு இதற்கு பதில் கூற வேண்டும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் வேலை அதனால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்

உள்ளாட்சித் தேர்தல் ஆணையரை மாற்றுவதென்பது உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைக்கு எதிரானது எதற்காக மாற்றப்பட்டார் என்பதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்னுடைய சந்தேகம் என்னவென்றால் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் சங்கடமாக இருக்கிறார்கள் ஏதாவது பிரச்சினை வராதா என இருக்கிறார்கள் அதன் அடிப்படையில்தான் இதை செய்துள்ளார்கள்

உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியை நாங்கள் ஆரம்பித்துவிட்டோம் இது சம்பந்தமாக மாநில பொதுக் குழுவைக் கூட்டி ஆலோசித்து உள்ளோம் எல்லா மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது வரும் 17ம் தேதி மீண்டும் ஒரு கூட்டம் இருக்கிறது அதில் மற்ற முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்

ரஃபேல் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் ஒரு பக்கத்தை மட்டுமே ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகிறது ரப்பேல் விவகாரத்தில் காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டு என்னவென்றால் ராணுவ கொள்முதல் செய்ய நேரடியாக பிரதம மந்திரி செல்ல காரணம் என்ன, காங்கிரஸ் ஆட்சியில் 600 கோடி வாங்கப்பட்ட ஒரு விமானம் பாஜக ஆட்சியில் 1200 கோடி வாங்கப்பட்டது ஏன், பேரம் குறித்து பேசிய ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க தயாரா,விமான தயாரிப்பு உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப் பட்டது ஏன் இதற்கான பதிலை மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.