சென்னை:குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், யுனிசெப் உடன் இணைந்து குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் 15 மாவட்டங்களில் குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் இளம் பருவத்தினருக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநில திட்டக்குழு உடன் இணைந்து மாநில சமச்சீர் வளர்ச்சியின் கீழ் முன்னேற விளையும் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 10 பின்தங்கிய வட்டாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'பால் ஏன் முன்பு போல் பாட்டில்களில் விற்கக்கூடாது..?' : அரசிற்கு உயர் நீதிமன்றம் யோசனை