சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 19 ஆயிரத்து 58 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 998 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1630 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 19 ஆயிரத்து 171 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில், கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 827 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 47 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 709ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் மீண்டும் 30 ஆயிரமாக குறைந்த கரோனா பாதிப்பு