தமிழ்நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 29) புதிதாக 6 ஆயிரத்து 426 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 114ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஆயிரத்து 117 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 97 ஆயிரத்து 575ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் இன்று மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 741ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 927 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த வீடு திரும்பிய நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 883ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 57 ஆயிரத்து 490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:
சென்னை - 97,575 பேர்
செங்கல்பட்டு - 13,841 பேர்
திருவள்ளூர் - 13,184 பேர்
மதுரை - 10,618 பேர்
காஞ்சிபுரம் - 8,422 பேர்
விருதுநகர் - 7,256 பேர்
தூத்துக்குடி - 6,591 பேர்
திருவண்ணாமலை - 5,823 பேர்
வேலூர் - 5,492 பேர்
திருநெல்வேலி - 4,729 பேர்
தேனி - 4,468 பேர்
ராணிப்பேட்டை - 4,491 பேர்
கன்னியாகுமரி - 4,275 பேர்
கோயம்புத்தூர் - 4,344 பேர்
திருச்சிராப்பள்ளி - 3,889 பேர்
கள்ளக்குறிச்சி - 3,633 பேர்
விழுப்புரம் - 3,499 பேர்
சேலம் - 3,428 பேர்
ராமநாதபுரம் - 3,169 பேர்
கடலூர் - 2,788 பேர்
திண்டுக்கல் - 2,622 பேர்
தஞ்சாவூர் - 2,554 பேர்
சிவகங்கை - 2,226 பேர்
தென்காசி - 1,911 பேர்
புதுக்கோட்டை - 1,926 பேர்
திருவாரூர் - 1,661 பேர்
திருப்பத்தூர் - 1,052 பேர்
அரியலூர் - 897 பேர்
கிருஷ்ணகிரி - 924 பேர்
திருப்பூர் - 795 பேர்
தருமபுரி - 750 பேர்
நீலகிரி - 735 பேர்
ஈரோடு - 680 பேர்
நாகப்பட்டினம் - 657 பேர்
நாமக்கல் - 604 பேர்
கரூர் - 431 பேர்
பெரம்பலூர் - 395 பேர்
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்:
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 805 பேர்
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 549 பேர்
ரயில் மூலம் வந்தவர்கள் - 425 பேர்
இதையும் படிங்க: தினம் 63 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை - முதலமைச்சர் தகவல்