சென்னை : தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 684 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,596 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 28 லட்சத்து 51 ஆயிரத்து 22 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 26 லட்சத்து 28 ஆயிரத்து 961 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர். இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள்,தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,534 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 76 ஆயிரத்து 646 ஆக உயர்ந்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் மூன்று நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 18 நோயாளிகளும் என சிகிச்சை பலனின்றி மேலும் 21 பேர் இறந்துள்ளனர்.இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 94 ஆக உயர்ந்துள்ளது.
கோயம்புத்தூர், சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,45,708
கோயம்புத்தூர் - 2,38,087
செங்கல்பட்டு - 1,66,354
திருவள்ளூர் - 1,16,406
சேலம் - 96,655
திருப்பூர் - 91,069
ஈரோடு - 99,441
மதுரை - 74,132
காஞ்சிபுரம் - 73,158
திருச்சிராப்பள்ளி - 74,865
தஞ்சாவூர் - 71,601
கன்னியாகுமரி - 61,188
கடலூர் - 62,675
தூத்துக்குடி - 55,584
திருநெல்வேலி - 48,543
திருவண்ணாமலை - 53,660
வேலூர் - 48,988
விருதுநகர் - 45,818
தேனி - 43,255
விழுப்புரம் - 45,023
நாமக்கல் - 49,411
ராணிப்பேட்டை - 42,703
கிருஷ்ணகிரி - 42,261
திருவாரூர் - 39,352
திண்டுக்கல் - 32,561
புதுக்கோட்டை - 29,303
திருப்பத்தூர் - 28,682
தென்காசி - 27,155
நீலகிரி - 32,018
கள்ளக்குறிச்சி - 30,362
தருமபுரி - 27,041
கரூர் - 23,240
மயிலாடுதுறை - 22,222
ராமநாதபுரம் - 20,234
நாகப்பட்டினம் - 19,909
சிவகங்கை - 19,512
அரியலூர் - 16,470
பெரம்பலூர் - 11,782
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1023
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1082
ரயில் மூலம் வந்தவர்கள் 428
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் - 4 ஆயிரத்து 967 வழக்குகள் பதிவு